வீடு - அளவான சமையலறை அமைப்பது எப்படி?
ஒரு
மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண் திருமணமாகிக் கணவன் வீடு
செல்கிறாள். அவள், அதிகம் செலவில்லாமல், ஆனால் தேவையான வசதிகளுடன் ஒரு
அழகான - அதிகம் பெரியதில்லாத - அளவான சமையலறையை அமைப்பது எப்படி?
பொதுவாக ஒரு சமையலறையை
அமைக்கும்போது எப்படியெல்லாம் அமைக்க வேண்டும் என்று கல்லூரியில் "ஹோம்
சயின்ஸ்' படிக்கும்போது சொல்லித் தருவார்கள். "எல்' வடிவம், "யு' வடிவம்
இப்படி இரண்டில் ஒரு வடிவில்தான் சமையலறை அமைக்கப்படும். இது
இரண்டுமில்லாமல் மூன்றாவதாக இணையான வடிவில் (parallel) அமைக்கப்படுவதும்
உண்டு. இந்த "பேரலல்' வடிவில் இரண்டு மேடைகள் இருப்பதுபோல அமைக்கப்படும்.
சிலசமயம் ஒரே மேடை மட்டும் அமைக்கப்படும். இடம் சிறியது என்றால் அதில் "யு'
அல்லது "எல்' வடிவில் அமைப்பதுதான் சிறந்தது.
நாம் சமையலறையில் தொடர்ந்து சில
மணி நேரங்களாவது இருந்து வேலை செய்ய வேண்டுமல்லவா? அதற்கேற்றபடி வீடு
கட்டும்போதே திட்டமிட்டுத் தேவையான இடம் ஒதுக்கிச் சமையலறையைக் கட்ட
வேண்டும். இல்லாவிட்டால் வசதிக்குறைவை நாம் அங்கிருக்கும் ஒவ்வொரு
நிமிடமும் உணர முடியும். சமையலறை நல்ல காற்றோட்டமாக இருக்க வேண்டியது
அவசியம். நம் ஆரோக்கியத்துக்கு வழிவகுப்பதோடு, நாம் நல்ல "மூடில்' இருந்து,
சமையலும் நல்ல ருசியோடு அமைய முக்கியக் காரணமாகும் இந்தக் காற்றோட்டம்.
வீடு கட்டும்போது வாஸ்து பார்க்க வேண்டியது அவசியமான ஒன்று. எது எது எந்த
இடத்தில் இருப்பது நலம் என்று பார்க்கும்போது, கிழக்குப் பக்கம் இருப்பது
நல்லது. தெற்குப் பார்த்து இருந்தால் காற்றோட்டம் நன்கு இருக்கும்.
கிழக்குப் பார்த்து இருப்பது இலக்கணம்னு சொல்வாங்க - அதுதான் "அக்னி மூலை.'
(கேஸ்) அடுப்பு வைக்க அதுதான் "ஐடியல்.' பொதுவாக இது எல்லாருமே
பார்ப்பதுதான் என்றாலும் "ஃபிளாட்'களிலே இதையெல்லாம் பார்க்க முடியுமா
என்பது கேள்விக்குறிதான்.
எது எப்படியானாலும் தனி வீடோ,
ஃபிளாட்டோ, இல்லை பெரிய பங்களாவோ சமையலறை நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும்
கொண்டதாக இருக்க வேண்டும். நாம் நம் நேரத்தில் ஓரளவு அதிகப்படியாகவே -
காலை, மாலை இரண்டு வேளையும் - இருக்குமிடம் சமையலறைதானே! அதோடு சமைத்த
பண்டங்கள், குறிப்பாகப் பல நாள்கள் (மாதங்கள்கூட) வைத்துக் கொள்ள வேண்டிய
ஊறுகாய் போன்றவற்றுக்கு வெளிச்சம், காற்றோட்டம் இரண்டுமே மிகவும் அவசியம்.
இது நம்மில் பலருக்குத் தெரிந்த ஒன்றுதான்.
சமையலறைக்குள் நுழையும்போதே ஓரளவு
நல்ல "மூடில்' இருக்கணும். கோபம், வருத்தம் போன்ற எதுவும் இருக்கக்
கூடாது. இவற்றோட "ரிப்ளெக்ஷன்' நிச்சயமா சமையலிலே தெரியும். எத்தனைதான்
சாமான்களைக் கொட்டிச் சமையல் செய்தாலும் நாம் எதிர்பார்க்கும்
"பெர்ஃபெக்ஷன்' கிடைக்காது. ஆண்டவனுக்குப் படைப்பது, தெய்வ காரியங்கள்,
பூஜைகள் செய்யும்போது அமைதியாக, குளித்து, சுத்தமாகச் செய்ய வேண்டுமென்பது
இதனால்தான். நல்ல மனதோடு "அப்ரோச்' செய்யணும்.
காற்றோட்டம், வெளிச்சம் இரண்டும்
ரொம்பவும் அடிப்படையான தேவைன்னு சொன்னேன் இல்லையா? கூடுமானவரை அதிகபட்சம்
எவ்வளவு ஜன்னல்கள் வைக்கமுடியுமோ அத்தனை வைக்கணும். ஜன்னல்கள் நடுவிலே
கம்பிகளைக்கூட நன்றாகக் கவனித்துதான் "செலக்ட்' பண்ணிப் போடணும். "மெஷ்'
(Mesh) போட்டதுபோல இருப்பது அவசியம். அடுத்தது சமையல் மேடை. இதைப்
போடும்போதே எவ்வளவு உயரம் வேண்டுமென்பதைச் சரியாகத் தேர்வு செய்து
அமைக்கணும். ஏறக்குறைய ஒரு சராசரியான உயரம் வைத்து மேடை கட்டுவது தவறு.
சமையல் செய்யும் பெண்கள் சற்று குள்ளமாக இருந்து, மேடை அதிக உயரமாக
இருந்துவிட்டால் அவர்களுக்கு ரொம்பவும் அசெüகர்யமாக இருக்கும் என்பதோடு,
அதனாலேயே தேவையில்லாமல் ஒரு எரிச்சல் சமையலறையினுள் நுழையும்போதே வரத்
தொடங்கிவிடும். அந்தக் குறிப்பிட்ட வீட்டின் இல்லத்தரசியின் உயரத்திற்கேற்ப
(அவர்தானே சமைக்கப் போகிறார்!) மேடை அமைப்பது சமையலறை அமைக்கும்போது
மனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
நன்றி .. அமானுஷ்யம் தளம். http://bit.ly/vhVFt4
No comments:
Post a Comment