Saturday, December 10, 2011

வீடு தந்த ஹனுமான்


சாதாரணமா தெய்வங்கள் வீடு பேறுதான் தரும். இந்த சாமிங்களுக்கெல்லாம் நம்ம பார்த்தா ஒரு அலட்சியம். இந்த சனத்துக்கும்,பக்தர்களுக்கும் வேலையே இல்லை. விட்டா வெற்றிலைக்கு சுண்ணாம்பு கூட கேப்பாய்ங்கன்னுட்டு அலுத்துக்கினே கிடப்பாய்ங்க.ஆனால் ஆஞ்சனேயரை பொருத்தவரை அவரே ஒரு பக்தர். பக்தர்களோட சிரமங்கள் எல்லாம் நல்லா தெரிஞ்சவரு. அதனாலதேன் தலீவரு .. நமக்கு சூப்பர் வீடு ஒன்னை வாடகைக்கு பிடிச்சு கொடுத்தாரு. அதுவும் 24 மணி நேரத்துல.

படிக்க அம்புலிமாமா கதை கணக்கா தெரிஞ்சாலும் இது நெஜம் வாத்யாரே.. நாம கடந்த ஒரு வருசமா இருந்த வீட்டை பத்தி சிறுகுறிப்பு ஒன்னை வரைஞ்சாதேன் அனுமாரு செய்த ஹெல்ப் எப்படியா கொத்த டைம்லி ஹெல்ப்புன்னு புரியும்.



நம்ம வீடு ஒரு முட்டு சந்துல கடேசியில மாடியில இருக்கு.காத்து வெளிச்சத்துக்கு தடா.ஒரு நாளைக்கு 6 மணி நேரம்லாம் பவர் கட்டு இருக்கிற காலம். ஒரு வராந்தா,கிச்சன்,ஹால்,ஒரு பெட் ரூம் ,அட்டாச்ட் துணி உலர்த்த கூட மாடிக்கு போகப்படாது. தட்ஸால்.வாடகை ரூ1000.( வாட்டர் பில் ரூ .300)

வாடகை கூட பிரச்சினை இல்லை. இந்த பவர் பில் தான் லொள்ளே. நாம ஊட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்கிறப்பயே "கொய்யால.. நான் காட்டுமிராண்டி ..எவனோடவும் அஜீஸ் ஆகமாட்டேன். நமுக்கு தனி மீட்டர் போட்டுக்கொடுத்துருங்கன்னு கண்டீஷனாவே சொல்லியிருந்தோம்.அவியளும் "அப்படியே ஆகட்டும்னு 6 மாசம் ஓட்டிட்டாய்ங்க.

கோ டெனன்ட் ஒரு வயசான பேச்சிலர். சகலவித மின் உபகரணங்களும் வச்சுக்கிட்டு கொண்டாடிட்டு பவர் பில் மட்டும் ரூ.140 ஐ கறாரா தள்ளி விட்டுருவாரு. ஆறு மாசத்துலயே பவர் பில் ரூ 200 ல ஆரம்பிச்சு ஆயிரத்து இரு நூறுவரை போயிருச்சு.
நமுக்கு ஊர் பஞ்சாயத்து பண்ணி பண்ணி பஞ்சாயத்துக்கு வர்ரவனை பஞ்சாயத்து பண்றவன் எப்படி பார்ப்பான்னு நெல்லாவே தெரியும்.அதுனால தனி மீட்டருக்கு ப்ரஷர் கொடுத்தோம்.செலவுல பாதிய ஏத்துக்கறேன்னு ரூ.3,000 வரை கேஷும் கொடுத்தாச்சு. ஒன்னும் பேரலை. ஆறு மாசம் ஓடிப்போச்சு.

"பொறுத்தது போதும் பொங்கி எழுன்னு வீடு பார்க்க ஆரம்பிச்சுட்டம். கடந்த நவம்பர் 29 , இருபதாவது திருமண நாள்.கானிப்பாக்கம் போயிருந்தம். மகள் எடுத்த ஃபோட்டோ நாம எப்படியா கொத்த பஞ்ச பரதேசின்னு டிஜிட்டல் துல்லியத்துல காட்டிருச்சு. நொந்து போயி புலம்ப மகள் மறு நாள் என்னென்னமோ தகிடு தத்தம்லாம் செய்து 45 லருந்து ஒரு 20 வயசு குறைச்சு -ஹவுஸ் ஓனர் கிட்டே ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி மாடியில ஒரு ஃபோட்டோ செஷன் எடுத்தாள்..

அப்பம் ஆஞ்சனேயர் ஒரு குரங்கு வடிவத்துல என்ட்ரி கொடுத்தாரு.அவர் கிட்டே பேச்சு வார்த்தை நடத்தி க்ளியர் பண்ண பிற்காடுதேன் ஃபோட்டோவே எடுக்க முடிஞ்சது. ( நவம்பர் ,30)

ஆனால் பாருங்க.. மறு நாளே ஹவுஸ் ஓனர் "யப்பா.. மேல் போர்ஷன் காலியாயிருச்சு. நீ மாத்திக்கிறியா பாரு.தனி மீட்டருன்னாரு.

இந்த வீடு பற்றி சில வரிகள். என்டர் ஆனதும் பெரிய ஹால் , அக்னி மூலையில அடுப்பு வாயு மூலையில பூஜை அறை (அலமாரி இல்லிங்கோ) - ஹாலை அடுத்து பெரிய வாசல் முக்காவாசிக்கு இரும்பு தகட்டு கூரை. ரைட்ல அட்டாச்டு -அடிஷ்னலா ஒரு பாத்ரூம்.

பழைய போர்ஷன்ல வாடகை ரூ.1000 ,பவர் பில் : ரூ.ஆயிரம் மைனஸ் ரூ.140 (கோ டெனன்ட் ஷேர்) வாட்டர் பில் ரூ.300 ஆக ரூ 2,160

இங்கன வாடகை ரூ.1,400 பவர் பில் ரூ.200 வாட்டர் பில் ரூ.300 ஆக ரூ.1,900 . வித்யாசம் ( ரூ.2160 மைனஸ் ரூ.1900 ) ரூ 260 .

கட்டற்ற வெளிச்சம், காற்று,சுதந்திரம், நம்ம ஜி.டி .நாயுடு வேலைகளுக்கு ஒரு பட்டறையே தயாராயிட்டிருக்கு. பவர் கட் நேரத்துல பாடிக்கு பவரேத்தறோம்ல..

செலவா ரூ.260 குறைஞ்சுருச்சு. வசதியா பல மடங்கு கூடிருச்சு. அல்லாம் அனுமார் கிரேஸ். ஆமா வீட்டுக்கு காரகன் சுக்கிரன் தானே.சுக்கிரனுக்குரிய க்டவுள் லட்சுமிதானே. ஆஞ்சனேயர் எப்படி ஊட்டை கொடுத்தாருன்னு கேப்பிக.சொல்றேன்.

ஆஞ்சனேயருக்கு ஸ்ரீ ப்ரதாய ன்னு ஒரு நாமா உண்டு. லட்சுமியை தந்தவனேனு அருத்தம். சீதா ஆரு லட்சுமி தானே. லட்சுமியை இழந்த ராமனுக்கு லட்சுமியை தந்தது அனுமாருதானே ..

கூட்டி கழிச்சு பாருங்க.கணக்கு கரீட்டா வரும்.



No comments: