Friday, December 16, 2011

வீடு- தேவைகள் என்ன ?

வீடு தேவைகள் என்ன ?




அலுவலகம் வீடு இரண்டிலும் அதிக பணி பளுவால் கொஞ்சநாளாக பதிவிட முடியவில்லை...

வீடு.. தேவைகள் என்னன்னு யோசித்தால்.. ஆட்களுக்கு தகுந்தபடி ..  பழக்க வழக்கங்களுக்கு தகுந்தபடி தேவைகள் மாறும்.பொதுவான தேவைகளும் உள்ளது. வீடு கட்டும்போது / வாங்கும்போது இவைகளை உறுதி செய்துகொள்வது நல்லது.

ஏனெனில் வேண்டியபடி வீட்டின் அமைப்பை மாற்ற பெரும் செலவு செய்யவேண்டி வரலாம். சில சமயத்தில் அடிப்படை கட்டுமானத்தை மாற்றினால் தான் வீடு வேண்டியபடி மாறும் என்றால் அதற்கு ஆகும்  செலவு ஏறக்குறைய புது  வீடு கட்ட ஆகும் செலவாக இருக்கலாம்.

அது மட்டுமல்ல..வீடு கட்டும்போது அங்கு யாரும் இருக்கபோவதில்லை. எனவே எப்படி வேண்டுமானலும் வேலை செய்யலாம். ஆனால் மாற்றியமைக்கும்போது, வேறு வீடு பார்த்து சாமான்களை மாற்றிடவேண்டும், இல்லைனா குப்பை , புழுதியுடன் அதே வீட்டில் குடியிருக்க பழகி கொள்ள வேண்டும்.



எனவே தேவைகளை பார்த்தால், ஒரு சிறு குடும்பம் 2 பெரியவர்கள் 2 குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு 1 ஹால், 1 கிச்சன், 1 படுக்கையறை, 1 கூடுதல் அறை,  இருந்தால், குழந்தைகள் பெரியவர்களாகும்வரை சரியாக இருக்கும்.

பாத்ரூம், டாய்லெட்ன்னு வரும்போது இப்போதைய கட்டுமானத்தில் ரெண்டையும் ஒன்றாக தான் கட்டுகிறார்கள். அட்டாசுடு பாத்ரூம்/டாய்லட்டாக இருந்தால் ரொம்ப வசதி. குடும்பத்தினர் மட்டும் இருக்கும்போது பிரச்சனை இல்லை, யாராவது உறவினர், நண்பர்கள் தங்க வந்தால் கொஞ்சம் சிரமம் தான்.  அதனால்  அட்டாசுடு 1 , தனியாக 1ன்னு 2 இருந்தால் நன்றாக இருக்கும். அல்லது அட்டாசுடு பாத்ரூம்முடன் 2 பெட்ரூம் இருந்தாலும் வசதியே.

குழந்தைகளுக்கு தனியறை அவசியமான்னு யோசிக்கணும். குழந்தைகளுக்கு தனியறை வைத்திருப்பது கொஞ்சம் வசதியாக இருக்கலாம், ஆனால் குழந்தகளுக்கும் பெற்றோர்களுக்குமான நெருக்கத்தை குறைத்துவிடுகிறது என்பது ஒரு குறை. மேலும் வளர் இளம்பருவத்தில் (10 - 16) குழந்தைகள் தடம் மாறவும் தனியறை வாய்ப்பாக அமையலாம்.

பொருட்களை வைக்க ஒரு அறை தேவைபடலாம். ஆனால் லாப்ட் / செல்ப் போன்றவற்றை பயன்படுத்தினால் இதற்கு என ஒரு அறை கட்ட வேண்டியது இல்லை.


அதனால்
1)  ஹால்
2) கிட்சன்
3) படுக்கையறை
4) கூடுதல் அறை.

N + 1 என்பது தான் பொதுவான பார்முலாவாக இருக்கிறது
1) சுத்தம் சுகம் தரும்...
2) வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடுன்னு  பழமொழிகள் இருக்கு.. ஏன் அப்படி ?

இந்த வைத்தியனுக்கு கொடுப்பதை ... இப்படியும் மாற்றி சொல்லலாம்

வீடு மாற்றியமைப்பதற்கு(ALTERATION) கொடுப்பதை , கட்டுவதற்கு கொடு..


No comments: