Thursday, December 1, 2011

வீடு .. ஏன் ஏதற்கு ?

வீடு.. ஏன் , ஏதற்கு ?


வீட்டில இருக்கிறவங்களுக்கு தகுந்தபடி தான் வீடு அமையனும்/கட்டணும்/பார்கணும்... சரி

வீட்டில யார் இருக்கிறாஙக ?
அட என்னப்பா இது .. கேள்வி குடும்பத்தில் இருக்கும் எல்லாரும் வீட்டில் இருப்பாங்க...


மேலோட்டமா பார்த்தா சரிதான் .. ஆனா உண்மையில் சரிதானா?


ஒரு பொருளை யார் அதிகம் பயன் படுத்துகிறார்களோ... அவர்களுக்கு தகுந்தபடி தான் அது வடிவமைக்க படவேண்டு.  இது தான் புராடட் டிசைன் எனப்படும் வடிவமைப்பு மேலாண்மையின் அடிப்படை தத்துவம். 


அப்படி பார்த்தால் வீடு இதை அதிகம் பயன்படுத்துவது பெண்களும் குழ்ந்தைகளும் தான். 
அவர்களின் தேவைக்கு தக்கபடி வீடு வடிவமைக்கபட்டல் எல்லரும் அதில் பிர்ச்சனை இல்லாமல் இருக்கலாம்.

பொருளாதாரரீதியில் முடிவு எடுக்கும் உரிமை பாதிக்கும் அதிகமாக ஆண்களிடமே உள்ளது. பெருநகரங்களில்  ஆண்-பெண் பேதமில்லாமல் அதிகப்ட்ச பெண்களும் வேலைக்கு போய் /தொழில் செய்து சம்பாதித்தாலும் பெரும்பாலும் சொத்து ஆண்களின் பெயரிலேயே உள்ளது. சில சமயத்தில் பெண்கள் பெயரில் வாங்கினாலும் அது வருமான வரி கணக்கு காட்ட , எதிர்காலத்தில் இரண்டு பேர் வருமானத்தையும் கூட்டி காட்டி  லோன்வாங்கவும் தான்.  


கணவன் மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்தும் வீட்டின் போர்டில் ராம் இல்லம், ராஜ் இல்லம் என்று இருக்கும் வீடுகளை நிறைய காணலாம்.


இதிலென்ன தவறு இருக்கு ? கணவர் குடும்ப தலைவர். அப்படி தான் அரசாங்கமும் சொல்லி ரேசன் கார்டு எல்லாம் குடுத்து இருக்கு. வீட்டு போர்டில் பேர் எழுதுறத போய் பெரிசா சொல்ல வந்துட்டீங்களேன்னு நினைப்பீங்க..


தத்வமசி..நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். அப்படீன்னு உபநீஷத் சொல்லுது.. இருத்யத்தின் நிறைவை வாய் பேசும்.. அப்படின்னு ஒரு வசனம் பைபிளில் இருக்கு. பானையில் இருப்பது தான் அகப்பையில் வரும்னு பழமொழி இருக்கு. 


விஷ்யம் என்னன்னா .. உலகம் மொத்தமுமே. ஆண்களின் பார்வையில் வடிவமைக்கபட்டு இருக்கு இதில் பெண் தான் பெரும்பாலும் வேண்டபடாத ஆறாவது விரலாக உணர்கிறாள். பெண் தேவை எப்பன்னா ஆண்கள் மட்டுமே பயன்படுத்தும் பொருளாக இருந்தாலும் சரி அதை விளம்பரப்படுத்த ஒரு கவர்ச்சி பொம்மையாக தேவை. மெகா சீரியலில் கதறியழும் பாத்திரத்துக்கு தேவை. வீல்லியாகூட தேவை. ஆனா ஒரு சக உயிரியா தேவை இல்லை.


சுலபமா புரிய ... நமக்கு இப்போ  இன்னொரு முகவரியாய்ட்ட செல்போனை எடுத்துகோங்க..
செல்போன் வடிவமைப்பு, அதனுடன் வரும் ரோப். ஹெட் போன் எல்லாமே ஆண்கள்  பயன்படுத்த சுலபமாக இருக்கிறமாதிரி தான் வடிவமைக்க பட்டு இருக்கு. செல்போனை கொண்டு சொல்லும் ஆண், அதை சட்டை பாக்கெல்ட்டிவச்சுகலாம் .. இல்லை பேண்ட் பாக்கடில் வச்சுகலாம். அதே போனை கொண்டு செல்லும் பெண் அதை கையிலயேதான் வச்சுக்கணும் எங்க போனாலும். எதையும் எடுக்கணும்னா போனை வச்சுடு அதை எடுத்துட்டு திரும்ப அதை வச்சுட்டு போனை எடுக்கனும்.  சிலர் உடைகளுக்குள் வைத்தாலும் போன் கால் வந்தாலும் இல்லை போன்பண்ணனும்லும் பலர் முன்னிலையில் அங்கிருந்து எடுக்கவேண்டி இருக்கும். இதற்காகவே கையிலயே வச்சுகிறாங்க.


நானும் என் மனைவியும் வெளியில் எங்கும்போனா போனை அவளுடைய போனை என்னிடம் கொடுத்துட்டுறது  வழக்கம். நான் இப்படி செய்யாதே உன் போனை உங்கிட்ட வச்சுகோ.. ரெண்டும் எங்கிட்டை இருந்தா உன்னை நான் எப்படி கூப்பிறதுன்னு கேட்டா .. நான் போனை எங்க வச்சுக. கையில வச்சுக கஷ்டமா இருக்குன்னு சொல்லுறா.. அதான் ஹேன்பாக் கொண்டுவந்தாலன்றி.. ரெண்டு போனையும் நான் தான்வச்சு ..எனக்கு நானே கூப்பிடுக்கணும்.


இதை எதுக்கு சொல்றேன்னா செல்போன் எல்லாரும் பயன்படுத்தும் ஒரு பொருள். அதிலேயே நாம் கவனிச்சாலும், கவனிகாம விட்டாலும் இத்தனை விஷய்ங்கள் இருக்கு. 2 வருடம் வைத்திருக்கபோகும் செல்போனில் இவை எல்லாம் இருந்தால் வீடுன்னு வரும்போது எத்தனை இருக்கும்?


ஓஷொ சொல்வார் ஆண்கள் வீட்டு வருவது என்பது போவதற்கு வேறு எந்த இடமும் இல்லை, கிளப் , பார்,கடை எல்லாம் மூடியாகி விட்டது இனி வீட்டுக்குதான் போக முடியும் என்னும்போது தான். ஆனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியெ வருவது என்பது அதைதவிர  வேறு வழி இல்லை என்னும்போது தன். வீட்டை அதிகம் நேசிப்பது அதற்காக நேரம் செலவிடுவது பெண்கள் தன், வேலக்கு அல்லது  சொந்த தொழிலுக்கு போனாலும் இது தான் நிலை. 


ஆண்களில் சிலர் வீட்டு வேலைகளில், மிக ஆர்வமுடன் சிறு வயது முதலே ஈடுபடுவதை பார்க்கலாம். நாம் நினைப்போம், இப்படிபட்டவர்களின் மண வாழ்க்கை சிறப்பாக இருக்க்ம் என. ஆனால் உண்மை நேர்மாறாக இருக்கிறது . இப்படி பட்டவர்களுக்கு மணவாழ்க்கையில் பல பிரச்சனைகளையே பார்த்து இருக்கிறேன்.


இப்படி பேசும்போது இது ஆணதிக்கம் என்றால்.... 
ஆணதிக்கம் பெணதிக்கம் .. என்ன பெயர்  சொன்னலும் எது உள்ளதோ அது மெய்.  எனவே.. வீடு என்று வரும்போது பெண்கள், குழந்தைளின் வசதிக்கு தகுந்தபடி தான் வீடு அமையவேண்டும். பெண்கள் குழந்தகளின் வசதிக்கு வீடு அமைந்தால் அதில் ஆண்களும் நிம்மதியாக வசிக்க இயலும்.

சரி அப்ப பெண்கள் / குழந்தைகளின் தேவை என்ன. ?

6 comments:

Sharmmi Jeganmogan said...

வணக்கம் வினோத்... வீட்டைப் பற்றி இவ்வளவு அழகாக சிந்திக்கிறீர்களே உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?

Unknown said...

வாங்க ஷர்மி...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

// நானும் என் மனைவியும் வெளியில் எங்கும்போனா போனை அவளுடைய போனை என்னிடம் கொடுத்துட்டுறது வழக்கம் //

கல்யாணம் ஆகாமல் மனைவி எங்கிருந்து வருவர்...

என் பார்வை சரியா இல்லையா என கருத்து சொல்லுங்க..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வீட்டை பற்றிய கனவில்லா மனிதரில்லை... நானும் தோணும் போதெல்லாம் நெறைய டிசைன்ஸ் போட்டு போட்டு வெக்கரதுண்டு... நைஸ் ட்ரீம்ஸ்... விஷ் இட் ஆல் டு கம் ட்ரூ...:)

Chittoor Murugesan said...

வினோத் ஜீ !
உங்க ப்ளாகுக்காக ஒரு போஸ்ட் எழுதினேன்.ஆனால் இன்னொரு போஸ்ட் எழுத நேரம் இல்லாததால அனுபவஜோதிடத்துலயே போட்டுட்டேன்.

நீங்கள் விரும்பினால் உங்க வலைப்பூவில் மீள் பதிவு செய்யலாம்.

http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_7253.html

Unknown said...

வாங்க அப்பாவி தங்கமணி,
உங்களுடைய, என்னுடைய ...எல்லாருடைய கனவையும் நினைவாக்க முயற்சி செய்வம் எப்பவும் கூட்டு பிராத்தனைக்கு வலிமை அதிகம்

Unknown said...

தல நீங்க சொன்ன பதிவை மறு பிரசுரம் பண்ணிட்டேன். மேலான ஆதரவுக்கு நன்றி..