Monday, November 28, 2011

வீடு - என்னென்ன யோசிக்கனும் என்ன தெரிஞ்சுக்கணும் ?

என்ன யோசிக்கனும் என்ன தெரிஞ்சுக்கணும் ?




கல்யாணம் பண்ணி பார். வீட்டை கட்டி பார்...
அப்படிங்கற பழ மொழி.. எல்லரும் அறிஞ்சது தான்.


வீடு கட்டுறதுக்கும் கல்யாணம் பண்றதக்கும் என்ன ஒற்றுமை...
அதேன்ன ரெண்டும் பார்ன்னு முடியுது...
அந்த காலத்துலயே டாஸ் மார்க் இருந்துருக்குமானு எல்லாம் கேட்க கூடாது..
இது கண்ணால பார்கிறோமே.. அதே பார் தான் .. 
ஏன் பார்ன்னு சொன்னாங்க..?

சாதரண வாழ்க்கையில் மார்கேடிங் சேல்ஸ் சர்விஸ் துறைகளை தவிர மற்றவற்றில் இருப்பவர்கள் புதிய நபர்களுடன் அதிகம் பழக வேண்டியது இல்லை. அதிலும் அலுவலக பணின்னா தினமும் பழகிய அதே நபர்களூடன் தான் பேச போகிறேன். அவர்களை பற்றி நமக்கு முன்பே தெரியும். எனவே இவர்கிட்ட இத கேட்கலாம் இவர் இப்படி தான்னு கணிச்சு இருப்போம்..

ஆன கல்யாணம்னு பொண்ணு .. இல்ல மாப்பிள்ளை பார்க்க போனா...
மக்க்ளின் சுயரூபம் எல்லம் அப்ப தான் தெரியும்...

நேற்று வரை என் உயிர் நீன்னு லவ் பண்ணிய லவ்வர் ...
எனக்கு வீட்டில பொண்ணு பார்க்கிறாங்க ... என் அண்ணி 50 பவுண், சன்ட்ரோ கார் கொண்டு வந்தாங்க .. நீயும் அப்படி வந்தா தான் கவுரமா இருக்கும்னு நேர சொல்லுவான் .. இல்ல சித்தப்ப பொண்ணு , மாம பொண்ண விட்டு சொல்ல சொல்லுவான் ...

அதோ போல் பொண்ணு அட்லீஸ்ட் ஒரு  சொந்த வீடு, வருஷம் 6  லட்சம் சம்பளம், மாமியார் கொழுந்தியா பிடுங்கல் இல்லாத இடம பார்கிறங்கடா நான் என்ன செய்யட்டும் நேரவே சொல்லிடுவா...



பெண் பார்க்க மாப்பிள்ளை பார்க்கன்னு போனா இருக்கிற அலம்பல் பற்றி ஒரு புத்தகமே போடலாம்.யாரால் எது எந்த நேரத்தில் எப்படி மாறும்ன்னு யாருக்கும் தெர்யாது   என் சொந்தகார பையனுக்கு பெண் பார்க்க போய் பையனுக்கும் பெண்ணுக்கு பெண் வீட்டில் பையன் வீட்டில் எல்லாம ஓகே.. ஆன திருமணம் நடக்கல ...ஏன் தெரியுமா ...  

பெண் வீடு கொஞ்சம் வசதிகுறைச்சலான இடம்.. அப்பா அம்மா ரெண்டுபேரும் தின கூலி வேலை.. அவங்களுக்கு ரெண்டு பெண்கள் தான். அதில் முதல் பெண்ணை தான் பையனுக்கு கேட்டது . பொண்ணுங்க ரெண்டுபேரும் படிச்சு முடிச்சு இப்ப வேலைக்கு  சேர்ந்திருக்காங்க.
பெண்ணுக்கு 5000 தங்கைக்கு 3000 சம்பளம். 


பெண்ணொட தங்கச்சி அக்காகிட்டயும் அப்பா அம்மாகிட்டையும் பேசி இப்போ கல்யாணம் வச்சா கொஞ்சமா தான் செலவு பண்ண முடியும் நகை போட முடியும். 5-6 வருசம் நாங்க சம்பாரிச்சு சேர்த்து வைச்சா 3-4 லட்சம் செலவில் கல்யாணம் பண்ணலாம் அதனால் இவளுக்கு இப்பொ கல்யாணம் வேண்டாம்னு சொல்லி, கல்யாணம் நின்னுபோச்சு..


கல்யாணம் பண்ண  வீடு கட்ட இதிலெல்லாம் இறங்கினா .. கீதோபதேசத்தை நேரில பார்க்கலாம்.

கடமையை செய் 
பலனை எதிர்பாரதே


பெண் /மாப்பிளை தேடலாம், பார்க்க போகலாம் , பேசலாம் பிடிச்சு போய்டலாம் .. 


ஏன் இன்னம் சில இடங்களில் மணவறை வரை வந்தும்  நின்றுபோன திருமணம் இருக்கு இல்ல..


அதுவும் வீடு கட்ட.. ஆரம்பிச்சா.. தினமும் மாலை 4 மணிக்கு மேஸ்திரி.. இல்லை இஞ்சினியர் போன் பண்ணி சார்.. ஒரு 10000, 8000 கொடுங்க, பேமெண்ட்ல அட்ஜஸ் பண்ணிக்கலாம்பார்..  இப்படி கொடுத்துட்டு .. அடுத்த நாள் 11 மணிக்கு சைட்டுக்கு போனா யாரும் இருக்க மாட்டங்க.. என்ன இன்னைக்கு யாரும் லீவ் கூட சொல்லல .. ஒரு வேலையும் நடக்கல.. காசு மாட்டும் தான்யா வாங்குறான்னு பொலம்பிகிட்டே காத்திருந்தா .. அரைமணி நேரம் கழிச்சு சித்தாள் மட்டும் வருவா .. கேட்டா சார்.. தண்ணி திர்ந்து போச்சு , நேத்தே மேஸ்திரிகிட்ட சொன்னோம் .. இன்னம் வரல.. தண்ணி வந்ததான சார் வேலை.. அதான் டீ சாப்பிட போய்டம்னு.. கூல்ல சொல்லுவா..


அடப்பாவி...மேஸ்திரி... பணம் வேண்ணுநு மாலை 4 - 6 வரை 12 தரம் போன்பண்ணி ..சன்டீவி உலக திரைபட வரலாறு விளம்பர  சாதனையை முறியடுச்சையே... ஒரு தரம் தண்ணி வண்டிக்கு போன்பண்ண கூடாதன்னு ஏக கடுப்பாகி போன்பண்ணி கேட்டால்.. சார் .. நேற்று மதியமே சைட்டுக்கு வந்து பார்த்து தண்ணி வண்டிக்கு போன்பண்ணிட்டேன் சார்.. வண்டி டிரைவர்ரோட மாமனர் வீட்டுல பாட்டி செத்துடாங்கனு போய்ட்டனாம்..  இன்னம் கொஞ்சம் நேரத்தில் வேற வண்டி வந்துரும் சார் .. நான் பார்த்துகறென். அப்புரம் .. சிமின்ட் கடை காரன் அட்வான்ச் கேட்டன் சார் .. மாலை வரட்டுமா ?ப்பார்..   என்ன சொல்றதுன்னே தெரியாம... பலி ஆடு மாதிரி முழிச்சுகிட்டெ வற்றதை தவிர வேறு வழியில்லை...


கொஞ்சம் கோவபட்டு பேசினா.. லவ்வர..பொண்டாடியை விட அதிகமா கோவிச்சுகிட்டு.. வாரகணக்கில் போனு பண்ண மாட்டர்.. வேலையும் நடக்காது .. அவருக்கு என்ன நட்டம்.. எல்லாம் நமக்கு தான் அதனால் பேசாமல் இருக்கிறது தான் சிறந்த வழின்னு, வீடு வேணுனு பட்ட ஆசையே துன்பத்துக்கு காரணம்னு... ஞானோபதேசம் எல்லாம் இலவசமா கிடைக்கும்.


 இடம் வீடு .. எல்லாம் எது எப்போ ..எப்படி அமையும்னு சொல்ல முடியாது.. 
இப்படி எதிர்பார்ப்பு இல்லாமல் , இடம் பொருள் ஏவல் பார்க்காமல் , ஈகோ பார்க்கமல் அலைஞ்சு .. கடன் பட்டு ஓஞ்சுபோய் ...வேலை முடியும்போது.. அதை பார்த்து ரசிக்கிறது ...கிட்டதட்ட.. பிரசவிச்ச பெண் .. குழந்தைய பார்க்கிரது மாதிரி...

அதனால் தான் கல்யாணம் பண்ணி பார் .. வீட்டை கட்டி பார்ன்னு நினைக்கறென்.


வீட்டு மேட்ட்ரில் முதலில் .. வீடு 

  1. ஏன், ஏதற்கு 
  2. எப்படி,
  3. எங்குன்னு
ஆராய்ச்சி பண்ணி முடிவு பண்ணிகிட்டா... அதிகம் அவதி படாம தப்பிக்கலாம்...


இதென்னடா வீடுனா குடியிருக்கதானே.. கேட்கல்லாம்... வீடு குடியிருக்க தான்..

ஆனா இந்த கேள்விக்கு விடை கண்டிபிடச்சா.. இன்னம் நல்லா இருக்கும்..


 ஏன், ஏதற்கு : 




வீடு .. குடியிருக்க தான் வாங்குறம்..சரி.. யார் குடியிருக்க? குடியிருக்கபோகும் நபர்களின் எண்ணிக்கை, தன்மை இதற்கு தகுந்தபடி வீடு இல்லைன்னா சொந்த வீடு வரமா இல்லாமல் சாபமா மாற வாய்ப்பு உண்டு. 

அலைபாயுதேவில் வரும் மாதவன் - ஷாலினி மாதிரி இருந்தா .. 1 ரூம் மட்டும் போது தான்..
 


கவனீங்க...பின்னனியில் இருக்கும் கட்டிமுடிக்கபடாத வீட்டை.. பேசபட முடியாத எழுதவும் சிரமான மன உணர்வுகளை ஒரு ஷாட்டில் காட்டுவதில் கலையுலக படைப்பாளிகள் திறமையானவர்கள் தான்.


 




ஆதி - பாடல்ல வர்ர மாதிரி குடும்பம் இருந்தா... மாதவன் ஷாலினி பேச கூட முடியாது...

இதனால் அறியப்படும் நீதி யாதேனில்.. 

வீட்டில் இருக்கும் நபர்களுக்கு தகுந்தபடி வீடு 
அமையாவிட்டல்.. வீடு அமைந்தாலும் இடைஞ்சலே..


ஆர்தரைடிஸ் மூட்டு வலி இருக்கிறவங்களுக்கும் 3வது  மாடியில் அருமையான வீடு
கிடைத்தாலும் முழுமனதுடன் கொண்டாட முடியுமா ?


இதையெல்லம் மனதில் வைத்து வீடு தேடினாலும் கிடைப்பது இறைவன் செயல் ..

17 comments:

கிருமி said...

சென்னைல வீடு வாங்கறவங்க, DABC & VGNல மட்டும் தப்பித் தவறி கூட அபார்ட்மெண்ட் வாங்கிறாதீங்க. முழுக்க ஒழுகும், மழைன்னா வீட்டுக்குள்ளயே படகு ஓட்டணும், நாலு வருஷத்துல பாதி வயரிங் மாத்தணும், மட்டமான கட்டுமானம். ஆனா பினிஷிங்க்லே கலக்கி, வெப்சைட்ல பிளாட் டிசைன், டிஸ்கஷன் அப்டி இப்டின்னு ஏமாத்திருவானுங்க. இத எங்கியாவது முதல் பக்கத்துல போட்டு மக்களை உசார் படுத்துங்க ஐயா!

Unknown said...

@கிருமி.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிருமி அவர்களே..

கோவை நேரம் said...

கட்டுங்க..நல்லா கட்டுங்க ...

Unknown said...

மாப்ள வீட்ட வச்சி பதிவ கட்டி எழுப்பிட்டீங்க பலே பலே!

ஜோதிஜி said...

முதலில் இந்த கருப்பு நிறத்தை மாத்துங்ககோ கோ கோ கோ.

நீங்க தான் சொல்லனும் நமக்கு எப்ப வாய்ப்பென்று?

குறையொன்றுமில்லை. said...

புது வீடு கட்டனும்னா எவ்வளவு விஷயங்களில் கவனமா இருக்கனும் இல்லியா? ஆல் த பெஸ்ட்

rajamelaiyur said...

நல்ல பதிவு ....

rajamelaiyur said...

நல்ல பதிவு ....

இன்று ..

பல்சுவை வலைதளம் விருது

Unknown said...

@கோவை நேரம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,

Unknown said...

@விக்கியுலகம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விக்கியுலகம்

Unknown said...

மாத்திட்டேன் ஜோதிஜி...
இது வசதியா இருக்கானு பாருங்க...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,

Unknown said...

வாஙக லக்ஷ்மி மேடம்...
எனக்கு தெரிந்த அளவிலேயெ... பல பல விஷ்யங்கள் இருக்கு... துறை சார்ந்த நிபுணர்களிடனும் ஆலோசனை வாங்கி பகிர்ந்துகொள்கிறேன்..

தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி,

Unknown said...

வாங்க ராஜா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

சி.பி.செந்தில்குமார் said...

அருமையான பதிவு

Unknown said...

வருகைகும் கருத்துக்கும் நன்றி செந்தில் குமார் அவர்களே.. உங்களை மாதிரி முன்னனி பதிவரிடம் பாரட்டு பெற்றது பெருமகிழ்ச்சியளிக்கிறாது..மீண்டும் நன்றிகள்.

Veena Devi said...

நாங்களும் இப்போ தான் சொந்த ஊரில் வீடு கட்ட ஆரம்பிச்சிருக்கோம் . நீங்க எழுதினதெல்லாம் 100 % உண்மை ....

Unknown said...

வாங்க மித்ரா அம்மா..
அம்மா ஆயிட்டா சொந்த பேர் நாம விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காணாம போய் மித்ரா அம்மானு ஆயிடுது.
பெண்களுக்கு தான் எத்தனை மாற்றாங்கள் வாழ்க்கயில் ?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.