Wednesday, February 15, 2012

மனிதனை சுருக்கும் வீடு

என் கனவு இல்லங்கற இந்த ப்ளாக்ல இந்த பதிவை போடலாமோ போடக்கூடாதோ தெரியலை. ( நாம பண்றதெல்லாம் இது மாதிரி அகடவிகடம் தானே )

வீடு மனிதனின் உடல் ,உள்ளம்,ஆத்மா அனைத்தையும் சுருக்குகிறது. சுற்றுலாவோ விரிவாக்குகிறது..

சுற்றுலான்னா என்ன குறிப்பிட்ட நோக்கம்னு இல்லாம (முக்கியமா மானிட்டரி கெயின்ஸ்) அக்கடான்னு ..அவுத்து விட்ட மாடாட்டம் நாலு இடம் சுற்றி பார்த்துட்டு வர்ரதுதேன் சுற்றுலா.

இதுல இப்போ மருத்துவ சுற்றுலான்னு ஒன்னை கோர்த்துவிட்டிருக்காய்ங்க.அதாவது மெடிக்கல், செக்கப், ஆப்பரேஷன் இத்யாதியை “சீப்பா” முடிச்சுக்கலாம்னு நாடுவிட்டு நாடு போறது. இதை நான் சுற்றுலா பட்டியல்ல சேர்க்கமாட்டேன்.இதுல மானிட்டரி கெயின் இருக்கே.

அடுத்தது ஆன்மீக சுற்றுலாவாம். கோயில் கோயிலா பார்த்துட்டு வந்துர்ரதை ஆன்மீக சுற்றுலாங்கறாய்ங்க.

இதையும் சுற்றுலாவுல சேர்க்கமுடியாது ஏன்னா இதுல “அவுத்து உட்ட மாடாட்டம்”ங்கற கான்செப்ட் கிடையாதே.

நோக்கம்,மானிட்டரி கெயின், ஏதோ ஒரு இழவுக்கு கட்டுப்பட்ட பயணம்லாம் சுற்றுலா பட்டியல்ல வராது. இந்த மேட்டர் எல்லாம் இல்லாத பயணத்தை வேணம்னா சுற்றுலான்னு சொல்லலாம்.

அவுத்துவிட்ட மாடுன்னு ஒரு வார்த்தைய போட்டிருக்கேன். பின்னே நாமெல்லாம் என்ன செக்குமாடானு கேப்பிக. ஆமாண்ணே. நாமெல்லாம் செக்கு மாடுதேன். ஒவ்வொரு நாளும் இன்னொரு நாளேங்கற நிலைதான் இருக்கு. அதனாலதேன் அவுத்துவிட்ட மாடுனு ஒரு குத்து குத்தியிருக்கேன்.

தெலுங்குல ” திரக்க செட்டாடு மகவாடு ..திரிகி செடிந்தி ஆடதி”ன்னுட்டு ஒரு பழமொழி உண்டு. இதனோட அர்த்தம் ஊர் சுற்றாம ஆம்பள கெட்டான். ஊர் சுத்தி பொம்பள கெட்டா”

நம்முது மேல் ஷேவனிஸ்ட் சொசைட்டிங்க்றதால இப்படி ஓரவஞ்சனையா சொல்லியிருக்காய்ங்க. ஊர் சுத்தாம இருந்தா ரெண்டு பாலும் ( ஆண்,பெண் பாலை சொன்னேங்க) பாலிடால் ஆயிரும்.

ஒரு மன்சன் தான் இருக்கிற இடத்தை விட்டு நகராம வாழ்ந்தா ஓடாத தண்ணில புழு உற்பத்தி ஆயிர்ராப்ல அவன் மனசு நாஸ்தி ஆயிரும்.

அங்கன எதிர்படற அல்லல்,அலைச்சல், வசதி குறைவு எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணி நாலு ஊரு சுத்தி பார்த்துட்டு சொந்த ஊருக்கு வந்தாதான் நம்ம ஊரு எவ்வளவோ பெட்டருப்பான்னு தோணும். வீட்டோட அருமை தெரியும்.

மன்சனை ரெம்ப இம்சைக்குள்ளாக்குற ஈகோ டைல்யூட் ஆயிரும் தெரியுமோ? சொந்த ஊர்ல டீக்கடை பெஞ்ச்ல உட்கார்ந்து டீ சாப்பிடாதவன் கூட வெளியூர்ல பிளாட்பாரத்துல படுத்து தூங்க தயாராயிருவான்.

வாழ்க்கையில மாறாதது மாற்றம் ஒன்னுதேன்.சுற்றுலாவுக்கு தயாராயிட்டிங்கன்னாலே நீங்க மாற்றத்தை ஏத்துக்கற ஆளுனு அர்த்தம். ஏத்துக்க தயாராயிட்டா எந்த மாற்றமும் பெரிசா பாதிக்காது. மாற்றத்துக்கு தயாராகாத பார்ட்டிக்கு மாற்றம் மரணத்துக்கு சமம்.

சாவுன்னா என்ன ? ஒரு ஊரை விட்டு அடுத்த ஊரு போறாப்லதானே. அப்பப்போ ஊர் ஊரா சுத்திட்டு வந்தம்னு வைங்க சொந்த ஊரு மேல அட்டாச்மெண்ட் குறையும். சாவூருக்கு கிளம்பற நேரம் ஏதோ இன்னொரு சுற்றுலாவுக்கு போற மாதிரியே ஒரு ஃபீலிங் வரும்.

இந்த உலகமே ஒரு சுற்றுலா மையம்தேன். ஏதோ வந்தோமா நாலு இடம் சுத்தி பார்த்தோமானு இருக்கனும். ஆனால் நம்ம சனம் ஏதோ இங்கயே கல்ப்ப கோடி காலங்கள் வாழ்ந்துரப்போறதா நினைச்சு வெட்டி மடியறாய்ங்க.

என்னைக்கேட்டா வருசத்துல ஒரு ஒன்னரை மாசத்தை சுற்றுலா சீசனா அறிவிச்சு போக்குவரத்து, லாட்ஜு செலவுல எல்லாம் 30% வெட்டு விதிக்கனும்ங்கண்ணா..

(வீட்டை விட்டு நகராதவனுக்கு டபுள் டாக்ஸ் )

No comments: