Thursday, December 22, 2011

அளவான சமையலறை அமைப்பது எப்படி?

வீடு - அளவான சமையலறை அமைப்பது எப்படி?


ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண் திருமணமாகிக் கணவன் வீடு செல்கிறாள். அவள், அதிகம் செலவில்லாமல், ஆனால் தேவையான வசதிகளுடன் ஒரு அழகான - அதிகம் பெரியதில்லாத - அளவான சமையலறையை அமைப்பது எப்படி? 

பொதுவாக ஒரு சமையலறையை அமைக்கும்போது எப்படியெல்லாம் அமைக்க வேண்டும் என்று கல்லூரியில் "ஹோம் சயின்ஸ்' படிக்கும்போது சொல்லித் தருவார்கள். "எல்' வடிவம், "யு' வடிவம் இப்படி இரண்டில் ஒரு வடிவில்தான் சமையலறை அமைக்கப்படும். இது இரண்டுமில்லாமல் மூன்றாவதாக இணையான வடிவில் (parallel) அமைக்கப்படுவதும் உண்டு. இந்த "பேரலல்' வடிவில் இரண்டு மேடைகள் இருப்பதுபோல அமைக்கப்படும். சிலசமயம் ஒரே மேடை மட்டும் அமைக்கப்படும். இடம் சிறியது என்றால் அதில் "யு' அல்லது "எல்' வடிவில் அமைப்பதுதான் சிறந்தது. 

நாம் சமையலறையில் தொடர்ந்து சில மணி நேரங்களாவது இருந்து வேலை செய்ய வேண்டுமல்லவா? அதற்கேற்றபடி வீடு கட்டும்போதே திட்டமிட்டுத் தேவையான இடம் ஒதுக்கிச் சமையலறையைக் கட்ட வேண்டும். இல்லாவிட்டால் வசதிக்குறைவை நாம் அங்கிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உணர முடியும். சமையலறை நல்ல காற்றோட்டமாக இருக்க வேண்டியது அவசியம். நம் ஆரோக்கியத்துக்கு வழிவகுப்பதோடு, நாம் நல்ல "மூடில்' இருந்து, சமையலும் நல்ல ருசியோடு அமைய முக்கியக் காரணமாகும் இந்தக் காற்றோட்டம். வீடு கட்டும்போது வாஸ்து பார்க்க வேண்டியது அவசியமான ஒன்று. எது எது எந்த இடத்தில் இருப்பது நலம் என்று பார்க்கும்போது, கிழக்குப் பக்கம் இருப்பது நல்லது. தெற்குப் பார்த்து இருந்தால் காற்றோட்டம் நன்கு இருக்கும். கிழக்குப் பார்த்து இருப்பது இலக்கணம்னு சொல்வாங்க - அதுதான் "அக்னி மூலை.' (கேஸ்) அடுப்பு வைக்க அதுதான் "ஐடியல்.' பொதுவாக இது எல்லாருமே பார்ப்பதுதான் என்றாலும் "ஃபிளாட்'களிலே இதையெல்லாம் பார்க்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். 

எது எப்படியானாலும் தனி வீடோ, ஃபிளாட்டோ, இல்லை பெரிய பங்களாவோ சமையலறை நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் கொண்டதாக இருக்க வேண்டும். நாம் நம் நேரத்தில் ஓரளவு அதிகப்படியாகவே - காலை, மாலை இரண்டு வேளையும் - இருக்குமிடம் சமையலறைதானே! அதோடு சமைத்த பண்டங்கள், குறிப்பாகப் பல நாள்கள் (மாதங்கள்கூட) வைத்துக் கொள்ள வேண்டிய ஊறுகாய் போன்றவற்றுக்கு வெளிச்சம், காற்றோட்டம் இரண்டுமே மிகவும் அவசியம். இது நம்மில் பலருக்குத் தெரிந்த ஒன்றுதான். 

சமையலறைக்குள் நுழையும்போதே ஓரளவு நல்ல "மூடில்' இருக்கணும். கோபம், வருத்தம் போன்ற எதுவும் இருக்கக் கூடாது. இவற்றோட "ரிப்ளெக்ஷன்' நிச்சயமா சமையலிலே தெரியும். எத்தனைதான் சாமான்களைக் கொட்டிச் சமையல் செய்தாலும் நாம் எதிர்பார்க்கும் "பெர்ஃபெக்ஷன்' கிடைக்காது. ஆண்டவனுக்குப் படைப்பது, தெய்வ காரியங்கள், பூஜைகள் செய்யும்போது அமைதியாக, குளித்து, சுத்தமாகச் செய்ய வேண்டுமென்பது இதனால்தான். நல்ல மனதோடு "அப்ரோச்' செய்யணும். 

காற்றோட்டம், வெளிச்சம் இரண்டும் ரொம்பவும் அடிப்படையான தேவைன்னு சொன்னேன் இல்லையா? கூடுமானவரை அதிகபட்சம் எவ்வளவு ஜன்னல்கள் வைக்கமுடியுமோ அத்தனை வைக்கணும். ஜன்னல்கள் நடுவிலே கம்பிகளைக்கூட நன்றாகக் கவனித்துதான் "செலக்ட்' பண்ணிப் போடணும். "மெஷ்' (Mesh) போட்டதுபோல இருப்பது அவசியம். அடுத்தது சமையல் மேடை. இதைப் போடும்போதே எவ்வளவு உயரம் வேண்டுமென்பதைச் சரியாகத் தேர்வு செய்து அமைக்கணும். ஏறக்குறைய ஒரு சராசரியான உயரம் வைத்து மேடை கட்டுவது தவறு. சமையல் செய்யும் பெண்கள் சற்று குள்ளமாக இருந்து, மேடை அதிக உயரமாக இருந்துவிட்டால் அவர்களுக்கு ரொம்பவும் அசெüகர்யமாக இருக்கும் என்பதோடு, அதனாலேயே தேவையில்லாமல் ஒரு எரிச்சல் சமையலறையினுள் நுழையும்போதே வரத் தொடங்கிவிடும். அந்தக் குறிப்பிட்ட வீட்டின் இல்லத்தரசியின் உயரத்திற்கேற்ப (அவர்தானே சமைக்கப் போகிறார்!) மேடை அமைப்பது சமையலறை அமைக்கும்போது மனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
 
நன்றி .. அமானுஷ்யம் தளம்.  http://bit.ly/vhVFt4

Friday, December 16, 2011

வீடு- தேவைகள் என்ன ?

வீடு தேவைகள் என்ன ?




அலுவலகம் வீடு இரண்டிலும் அதிக பணி பளுவால் கொஞ்சநாளாக பதிவிட முடியவில்லை...

வீடு.. தேவைகள் என்னன்னு யோசித்தால்.. ஆட்களுக்கு தகுந்தபடி ..  பழக்க வழக்கங்களுக்கு தகுந்தபடி தேவைகள் மாறும்.பொதுவான தேவைகளும் உள்ளது. வீடு கட்டும்போது / வாங்கும்போது இவைகளை உறுதி செய்துகொள்வது நல்லது.

ஏனெனில் வேண்டியபடி வீட்டின் அமைப்பை மாற்ற பெரும் செலவு செய்யவேண்டி வரலாம். சில சமயத்தில் அடிப்படை கட்டுமானத்தை மாற்றினால் தான் வீடு வேண்டியபடி மாறும் என்றால் அதற்கு ஆகும்  செலவு ஏறக்குறைய புது  வீடு கட்ட ஆகும் செலவாக இருக்கலாம்.

அது மட்டுமல்ல..வீடு கட்டும்போது அங்கு யாரும் இருக்கபோவதில்லை. எனவே எப்படி வேண்டுமானலும் வேலை செய்யலாம். ஆனால் மாற்றியமைக்கும்போது, வேறு வீடு பார்த்து சாமான்களை மாற்றிடவேண்டும், இல்லைனா குப்பை , புழுதியுடன் அதே வீட்டில் குடியிருக்க பழகி கொள்ள வேண்டும்.



எனவே தேவைகளை பார்த்தால், ஒரு சிறு குடும்பம் 2 பெரியவர்கள் 2 குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு 1 ஹால், 1 கிச்சன், 1 படுக்கையறை, 1 கூடுதல் அறை,  இருந்தால், குழந்தைகள் பெரியவர்களாகும்வரை சரியாக இருக்கும்.

பாத்ரூம், டாய்லெட்ன்னு வரும்போது இப்போதைய கட்டுமானத்தில் ரெண்டையும் ஒன்றாக தான் கட்டுகிறார்கள். அட்டாசுடு பாத்ரூம்/டாய்லட்டாக இருந்தால் ரொம்ப வசதி. குடும்பத்தினர் மட்டும் இருக்கும்போது பிரச்சனை இல்லை, யாராவது உறவினர், நண்பர்கள் தங்க வந்தால் கொஞ்சம் சிரமம் தான்.  அதனால்  அட்டாசுடு 1 , தனியாக 1ன்னு 2 இருந்தால் நன்றாக இருக்கும். அல்லது அட்டாசுடு பாத்ரூம்முடன் 2 பெட்ரூம் இருந்தாலும் வசதியே.

குழந்தைகளுக்கு தனியறை அவசியமான்னு யோசிக்கணும். குழந்தைகளுக்கு தனியறை வைத்திருப்பது கொஞ்சம் வசதியாக இருக்கலாம், ஆனால் குழந்தகளுக்கும் பெற்றோர்களுக்குமான நெருக்கத்தை குறைத்துவிடுகிறது என்பது ஒரு குறை. மேலும் வளர் இளம்பருவத்தில் (10 - 16) குழந்தைகள் தடம் மாறவும் தனியறை வாய்ப்பாக அமையலாம்.

பொருட்களை வைக்க ஒரு அறை தேவைபடலாம். ஆனால் லாப்ட் / செல்ப் போன்றவற்றை பயன்படுத்தினால் இதற்கு என ஒரு அறை கட்ட வேண்டியது இல்லை.


அதனால்
1)  ஹால்
2) கிட்சன்
3) படுக்கையறை
4) கூடுதல் அறை.

N + 1 என்பது தான் பொதுவான பார்முலாவாக இருக்கிறது
1) சுத்தம் சுகம் தரும்...
2) வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடுன்னு  பழமொழிகள் இருக்கு.. ஏன் அப்படி ?

இந்த வைத்தியனுக்கு கொடுப்பதை ... இப்படியும் மாற்றி சொல்லலாம்

வீடு மாற்றியமைப்பதற்கு(ALTERATION) கொடுப்பதை , கட்டுவதற்கு கொடு..


Saturday, December 10, 2011

வீடு தந்த ஹனுமான்


சாதாரணமா தெய்வங்கள் வீடு பேறுதான் தரும். இந்த சாமிங்களுக்கெல்லாம் நம்ம பார்த்தா ஒரு அலட்சியம். இந்த சனத்துக்கும்,பக்தர்களுக்கும் வேலையே இல்லை. விட்டா வெற்றிலைக்கு சுண்ணாம்பு கூட கேப்பாய்ங்கன்னுட்டு அலுத்துக்கினே கிடப்பாய்ங்க.ஆனால் ஆஞ்சனேயரை பொருத்தவரை அவரே ஒரு பக்தர். பக்தர்களோட சிரமங்கள் எல்லாம் நல்லா தெரிஞ்சவரு. அதனாலதேன் தலீவரு .. நமக்கு சூப்பர் வீடு ஒன்னை வாடகைக்கு பிடிச்சு கொடுத்தாரு. அதுவும் 24 மணி நேரத்துல.

படிக்க அம்புலிமாமா கதை கணக்கா தெரிஞ்சாலும் இது நெஜம் வாத்யாரே.. நாம கடந்த ஒரு வருசமா இருந்த வீட்டை பத்தி சிறுகுறிப்பு ஒன்னை வரைஞ்சாதேன் அனுமாரு செய்த ஹெல்ப் எப்படியா கொத்த டைம்லி ஹெல்ப்புன்னு புரியும்.

நம்ம வீடு ஒரு முட்டு சந்துல கடேசியில மாடியில இருக்கு.காத்து வெளிச்சத்துக்கு தடா.ஒரு நாளைக்கு 6 மணி நேரம்லாம் பவர் கட்டு இருக்கிற காலம். ஒரு வராந்தா,கிச்சன்,ஹால்,ஒரு பெட் ரூம் ,அட்டாச்ட் துணி உலர்த்த கூட மாடிக்கு போகப்படாது. தட்ஸால்.வாடகை ரூ1000.( வாட்டர் பில் ரூ .300)

வாடகை கூட பிரச்சினை இல்லை. இந்த பவர் பில் தான் லொள்ளே. நாம ஊட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்கிறப்பயே "கொய்யால.. நான் காட்டுமிராண்டி ..எவனோடவும் அஜீஸ் ஆகமாட்டேன். நமுக்கு தனி மீட்டர் போட்டுக்கொடுத்துருங்கன்னு கண்டீஷனாவே சொல்லியிருந்தோம்.அவியளும் "அப்படியே ஆகட்டும்னு 6 மாசம் ஓட்டிட்டாய்ங்க.

கோ டெனன்ட் ஒரு வயசான பேச்சிலர். சகலவித மின் உபகரணங்களும் வச்சுக்கிட்டு கொண்டாடிட்டு பவர் பில் மட்டும் ரூ.140 ஐ கறாரா தள்ளி விட்டுருவாரு. ஆறு மாசத்துலயே பவர் பில் ரூ 200 ல ஆரம்பிச்சு ஆயிரத்து இரு நூறுவரை போயிருச்சு.
நமுக்கு ஊர் பஞ்சாயத்து பண்ணி பண்ணி பஞ்சாயத்துக்கு வர்ரவனை பஞ்சாயத்து பண்றவன் எப்படி பார்ப்பான்னு நெல்லாவே தெரியும்.அதுனால தனி மீட்டருக்கு ப்ரஷர் கொடுத்தோம்.செலவுல பாதிய ஏத்துக்கறேன்னு ரூ.3,000 வரை கேஷும் கொடுத்தாச்சு. ஒன்னும் பேரலை. ஆறு மாசம் ஓடிப்போச்சு.

"பொறுத்தது போதும் பொங்கி எழுன்னு வீடு பார்க்க ஆரம்பிச்சுட்டம். கடந்த நவம்பர் 29 , இருபதாவது திருமண நாள்.கானிப்பாக்கம் போயிருந்தம். மகள் எடுத்த ஃபோட்டோ நாம எப்படியா கொத்த பஞ்ச பரதேசின்னு டிஜிட்டல் துல்லியத்துல காட்டிருச்சு. நொந்து போயி புலம்ப மகள் மறு நாள் என்னென்னமோ தகிடு தத்தம்லாம் செய்து 45 லருந்து ஒரு 20 வயசு குறைச்சு -ஹவுஸ் ஓனர் கிட்டே ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி மாடியில ஒரு ஃபோட்டோ செஷன் எடுத்தாள்..

அப்பம் ஆஞ்சனேயர் ஒரு குரங்கு வடிவத்துல என்ட்ரி கொடுத்தாரு.அவர் கிட்டே பேச்சு வார்த்தை நடத்தி க்ளியர் பண்ண பிற்காடுதேன் ஃபோட்டோவே எடுக்க முடிஞ்சது. ( நவம்பர் ,30)

ஆனால் பாருங்க.. மறு நாளே ஹவுஸ் ஓனர் "யப்பா.. மேல் போர்ஷன் காலியாயிருச்சு. நீ மாத்திக்கிறியா பாரு.தனி மீட்டருன்னாரு.

இந்த வீடு பற்றி சில வரிகள். என்டர் ஆனதும் பெரிய ஹால் , அக்னி மூலையில அடுப்பு வாயு மூலையில பூஜை அறை (அலமாரி இல்லிங்கோ) - ஹாலை அடுத்து பெரிய வாசல் முக்காவாசிக்கு இரும்பு தகட்டு கூரை. ரைட்ல அட்டாச்டு -அடிஷ்னலா ஒரு பாத்ரூம்.

பழைய போர்ஷன்ல வாடகை ரூ.1000 ,பவர் பில் : ரூ.ஆயிரம் மைனஸ் ரூ.140 (கோ டெனன்ட் ஷேர்) வாட்டர் பில் ரூ.300 ஆக ரூ 2,160

இங்கன வாடகை ரூ.1,400 பவர் பில் ரூ.200 வாட்டர் பில் ரூ.300 ஆக ரூ.1,900 . வித்யாசம் ( ரூ.2160 மைனஸ் ரூ.1900 ) ரூ 260 .

கட்டற்ற வெளிச்சம், காற்று,சுதந்திரம், நம்ம ஜி.டி .நாயுடு வேலைகளுக்கு ஒரு பட்டறையே தயாராயிட்டிருக்கு. பவர் கட் நேரத்துல பாடிக்கு பவரேத்தறோம்ல..

செலவா ரூ.260 குறைஞ்சுருச்சு. வசதியா பல மடங்கு கூடிருச்சு. அல்லாம் அனுமார் கிரேஸ். ஆமா வீட்டுக்கு காரகன் சுக்கிரன் தானே.சுக்கிரனுக்குரிய க்டவுள் லட்சுமிதானே. ஆஞ்சனேயர் எப்படி ஊட்டை கொடுத்தாருன்னு கேப்பிக.சொல்றேன்.

ஆஞ்சனேயருக்கு ஸ்ரீ ப்ரதாய ன்னு ஒரு நாமா உண்டு. லட்சுமியை தந்தவனேனு அருத்தம். சீதா ஆரு லட்சுமி தானே. லட்சுமியை இழந்த ராமனுக்கு லட்சுமியை தந்தது அனுமாருதானே ..

கூட்டி கழிச்சு பாருங்க.கணக்கு கரீட்டா வரும்.



வீடு தந்த ஹனுமான்


சாதாரணமா தெய்வங்கள் வீடு பேறுதான் தரும். இந்த சாமிங்களுக்கெல்லாம் நம்ம பார்த்தா ஒரு அலட்சியம். இந்த சனத்துக்கும்,பக்தர்களுக்கும் வேலையே இல்லை. விட்டா வெற்றிலைக்கு சுண்ணாம்பு கூட கேப்பாய்ங்கன்னுட்டு அலுத்துக்கினே கிடப்பாய்ங்க.ஆனால் ஆஞ்சனேயரை பொருத்தவரை அவரே ஒரு பக்தர். பக்தர்களோட சிரமங்கள் எல்லாம் நல்லா தெரிஞ்சவரு. அதனாலதேன் தலீவரு .. நமக்கு சூப்பர் வீடு ஒன்னை வாடகைக்கு பிடிச்சு கொடுத்தாரு. அதுவும் 24 மணி நேரத்துல.

படிக்க அம்புலிமாமா கதை கணக்கா தெரிஞ்சாலும் இது நெஜம் வாத்யாரே.. நாம கடந்த ஒரு வருசமா இருந்த வீட்டை பத்தி சிறுகுறிப்பு ஒன்னை வரைஞ்சாதேன் அனுமாரு செய்த ஹெல்ப் எப்படியா கொத்த டைம்லி ஹெல்ப்புன்னு புரியும்.



நம்ம வீடு ஒரு முட்டு சந்துல கடேசியில மாடியில இருக்கு.காத்து வெளிச்சத்துக்கு தடா.ஒரு நாளைக்கு 6 மணி நேரம்லாம் பவர் கட்டு இருக்கிற காலம். ஒரு வராந்தா,கிச்சன்,ஹால்,ஒரு பெட் ரூம் ,அட்டாச்ட் துணி உலர்த்த கூட மாடிக்கு போகப்படாது. தட்ஸால்.வாடகை ரூ1000.( வாட்டர் பில் ரூ .300)

வாடகை கூட பிரச்சினை இல்லை. இந்த பவர் பில் தான் லொள்ளே. நாம ஊட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்கிறப்பயே "கொய்யால.. நான் காட்டுமிராண்டி ..எவனோடவும் அஜீஸ் ஆகமாட்டேன். நமுக்கு தனி மீட்டர் போட்டுக்கொடுத்துருங்கன்னு கண்டீஷனாவே சொல்லியிருந்தோம்.அவியளும் "அப்படியே ஆகட்டும்னு 6 மாசம் ஓட்டிட்டாய்ங்க.

கோ டெனன்ட் ஒரு வயசான பேச்சிலர். சகலவித மின் உபகரணங்களும் வச்சுக்கிட்டு கொண்டாடிட்டு பவர் பில் மட்டும் ரூ.140 ஐ கறாரா தள்ளி விட்டுருவாரு. ஆறு மாசத்துலயே பவர் பில் ரூ 200 ல ஆரம்பிச்சு ஆயிரத்து இரு நூறுவரை போயிருச்சு.
நமுக்கு ஊர் பஞ்சாயத்து பண்ணி பண்ணி பஞ்சாயத்துக்கு வர்ரவனை பஞ்சாயத்து பண்றவன் எப்படி பார்ப்பான்னு நெல்லாவே தெரியும்.அதுனால தனி மீட்டருக்கு ப்ரஷர் கொடுத்தோம்.செலவுல பாதிய ஏத்துக்கறேன்னு ரூ.3,000 வரை கேஷும் கொடுத்தாச்சு. ஒன்னும் பேரலை. ஆறு மாசம் ஓடிப்போச்சு.

"பொறுத்தது போதும் பொங்கி எழுன்னு வீடு பார்க்க ஆரம்பிச்சுட்டம். கடந்த நவம்பர் 29 , இருபதாவது திருமண நாள்.கானிப்பாக்கம் போயிருந்தம். மகள் எடுத்த ஃபோட்டோ நாம எப்படியா கொத்த பஞ்ச பரதேசின்னு டிஜிட்டல் துல்லியத்துல காட்டிருச்சு. நொந்து போயி புலம்ப மகள் மறு நாள் என்னென்னமோ தகிடு தத்தம்லாம் செய்து 45 லருந்து ஒரு 20 வயசு குறைச்சு -ஹவுஸ் ஓனர் கிட்டே ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி மாடியில ஒரு ஃபோட்டோ செஷன் எடுத்தாள்..

அப்பம் ஆஞ்சனேயர் ஒரு குரங்கு வடிவத்துல என்ட்ரி கொடுத்தாரு.அவர் கிட்டே பேச்சு வார்த்தை நடத்தி க்ளியர் பண்ண பிற்காடுதேன் ஃபோட்டோவே எடுக்க முடிஞ்சது. ( நவம்பர் ,30)

ஆனால் பாருங்க.. மறு நாளே ஹவுஸ் ஓனர் "யப்பா.. மேல் போர்ஷன் காலியாயிருச்சு. நீ மாத்திக்கிறியா பாரு.தனி மீட்டருன்னாரு.

இந்த வீடு பற்றி சில வரிகள். என்டர் ஆனதும் பெரிய ஹால் , அக்னி மூலையில அடுப்பு வாயு மூலையில பூஜை அறை (அலமாரி இல்லிங்கோ) - ஹாலை அடுத்து பெரிய வாசல் முக்காவாசிக்கு இரும்பு தகட்டு கூரை. ரைட்ல அட்டாச்டு -அடிஷ்னலா ஒரு பாத்ரூம்.

பழைய போர்ஷன்ல வாடகை ரூ.1000 ,பவர் பில் : ரூ.ஆயிரம் மைனஸ் ரூ.140 (கோ டெனன்ட் ஷேர்) வாட்டர் பில் ரூ.300 ஆக ரூ 2,160

இங்கன வாடகை ரூ.1,400 பவர் பில் ரூ.200 வாட்டர் பில் ரூ.300 ஆக ரூ.1,900 . வித்யாசம் ( ரூ.2160 மைனஸ் ரூ.1900 ) ரூ 260 .

கட்டற்ற வெளிச்சம், காற்று,சுதந்திரம், நம்ம ஜி.டி .நாயுடு வேலைகளுக்கு ஒரு பட்டறையே தயாராயிட்டிருக்கு. பவர் கட் நேரத்துல பாடிக்கு பவரேத்தறோம்ல..

செலவா ரூ.260 குறைஞ்சுருச்சு. வசதியா பல மடங்கு கூடிருச்சு. அல்லாம் அனுமார் கிரேஸ். ஆமா வீட்டுக்கு காரகன் சுக்கிரன் தானே.சுக்கிரனுக்குரிய க்டவுள் லட்சுமிதானே. ஆஞ்சனேயர் எப்படி ஊட்டை கொடுத்தாருன்னு கேப்பிக.சொல்றேன்.

ஆஞ்சனேயருக்கு ஸ்ரீ ப்ரதாய ன்னு ஒரு நாமா உண்டு. லட்சுமியை தந்தவனேனு அருத்தம். சீதா ஆரு லட்சுமி தானே. லட்சுமியை இழந்த ராமனுக்கு லட்சுமியை தந்தது அனுமாருதானே ..

கூட்டி கழிச்சு பாருங்க.கணக்கு கரீட்டா வரும்.



Monday, December 5, 2011

வீடு -ஜோதிட அலசல்


அண்ணே வணக்கம்ணே .. நம்ம வினோத்ஜீ வீடுங்கற பேர்ல ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு "ஊடு" கட்டி விளையாடிக்கிட்டிருக்காரு. நம்மை ஆத்தரா வேற இன்வைட் பண்ணிட்டாரு. நம்முது கடகலக்னம்ங்கறதாலயோ என்னமோ அந்த தலைப்பு நமீதா கணக்கா நம்மை இழுத்துருச்சு.வாரத்துக்கு ஒரு போஸ்டாச்சும் போடலின்னா நல்லாருக்காது.

அதே சமயம் நாம ஆரம்பிச்ச மினி தொடரையும் தொடர்ந்தாக வேண்டியிருக்கு. ஆக்சுவலா இன்னைக்கு குருவை பற்றி எழுதனும். குருவுக்குரிய தெய்வமா தட்சிணா மூர்த்தி சொல்லப்படுகிறார். குருவுக்கும் -த.மூர்த்திக்கும் என்ன தொடர்புன்னு எழுதியாகனும். அதே நேரத்துல வீட்டை பற்றியும் எழுதனும். ஊரை சுத்தின மாதிரியும் இருக்கனும் அண்ணனுக்கு பொண்ணை பார்த்த மாதிரியும் இருக்கனும்ங்கற மாதிரி எழுதனும்னா இன்னைக்கு குரு -சனி -புத-கேது எல்லாரையும் ஓவர் லுக் பண்ணி சுக்கிரனுக்கு ஜம்ப் ஆயிரனும்.
ஏன்னா அவர் தானே கிருக காரகர் ( கிரகம் - வீடு). கில்மாவுக்கும் அவர்தான் காரகம்னு தனியே சொல்லத்தேவையில்லை.

மன்சன் வீடு கட்ட ஆரம்பிச்சதே கில்மாவுக்காகத்தான்னு "வீடும்-வீடு பேறும்" பதிவுல சொன்னது ஞா இருக்கலாம்.அது மனோதத்துவ அலசல். இது ஜோதிட அலசல்.மனோதத்துவம்னா குறுந்தாடி வச்ச கிழவாடிகள் அடிக்கிற ஜல்லின்னு நினைச்சுராதிங்க. மனோதத்துவம் சொல்ற ஆசனப்பருவம் மூலாதாரத்தையும்-அதையடுத்து வரும் பருவம் ஸ்வாதிஷ்டானத்தையும் குறிப்பிடுது.

மனோதத்துவத்துக்கும் யோக சாஸ்திரத்துக்குமே லிங்க் இருக்கும்போது ஜோதிடத்துக்கும் மனோதத்துவத்துக்கும் லிங்க் இருக்காதா என்ன? கீது நைனா..

ஜோதிஷத்துல யோ.சா, ம.தத்துவம் எல்லாம் அடங்கி இருக்கு. ஒரு கிரகம் வீசும் கிரணம் ,அதிர்வு அவை தரும் தூண்டுதல் மனித உடல்/மனதை என்ன செய்யும்ங்கறது அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம்.

ஆனால் அந்த தூண்டுதல் -அதன் விளைவு என்னவா முடியும்ங்கறதெல்லாம் மருத்துவம் -மனோதத்துவம். இது அன்றைய ரிஷிகள் மகரிஷிகளின் "பட்டறிவுக்கு" சாட்சி.

உதாரணமா கடகத்துக்கு அதிபதி சந்திரன்.அவர் அடிக்கடி கட்சி மாறும் அரசியல் வாதி மாதிரி ராசி மாறிக்கிட்டே இருப்பாரு. இதனால ஜாதகனோட மன நிலை -உடல் நிலையில் ஒரு வித திடீர் தன்மை,எதிர்பாரா தன்மை ,நிலையற்ற தன்மை இருக்கும் அனுகூல,பிரதி கூல நிலை மாறி மாறி வரும். இது ஸ்பார்க்.

இதை வச்சு மனித உடல் /மனம் என்ன பாடுபடும்னு கணிக்கிறச்ச மருத்துவம் சைக்காலஜி எல்லாம் வந்துருது. பெரியவுக கோடிட்டு காட்டியிருக்காய்ங்க. நாம கோடிட்ட இடத்தை நிரப்பறோம். தட்ஸால்.

எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டாருய்யான்னு அலுத்துக்காதிங்க.பாய்ண்டுக்கு வரேன். சுக்கிரன் கில்மாவுக்கு காரகன் என்பது ஸ்பார்க் .ஞானோதயம். அடுத்து அவர் கிருக காரகன் ,வாகன காரகன்னு சொல்லியிருக்காய்ங்களே அதெல்லாம் மருத்துவம் சைக்காலஜி தொடர்பான உண்மைகள்.

சுக்கிரன் நல்லாருந்தா பார்ட்டி கில்மா மேட்டர்ல படு கிட்டனாயிருப்பாரு. பெண் வீக்கர் செக்ஸ். சதா இன்செக்யூரிட்டியில இருக்கிறவள்.அவளுக்கு செக்யூரிட்டி எது வீடு..கில்மாவுக்குன்னா கட்டிலறை -அதுக்கு கதவு. இதெல்லாம் இருந்தா தேன் கில்மா படு கில்மாவா இருக்கும்.Read More


Sunday, December 4, 2011

வீடு- இணையத்தில் இலவசமாய் சொந்த வீடு...

வீடு- இணையத்தில் இலவசமாய் சொந்த வீடு...





சொந்த வீடு பற்றி நாம் சிந்தித்தோம்... இடையில்... கூகிள் நிறுவனம் இந்தியர்க்ளுக்கு இலவச வலை மனை தருகிறது.ஆர்வமாக  வலை மனை பயன்படுத்துபடுத்துபவர்கள் பலருக்கும் இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பெயர் பதிவு, வலை மனை அமைக்க இடம், 1 வருடம் கால பயன்பாடு எல்லாம் முற்றுலும் இலவசம்.உங்கள் சொந்த பெயரில் , ஈமெயில் , வலை மனை அமைத்து கொள்ளலாம் உதாரணமாக ..






இணையம் என்பது தற்பொழுது மிகவும் முக்கியமான ஒன்றாகி விட்டது. இணையத்தில் கிடைக்காதது எதுவும் இல்லை. ஒரு குண்டூசி தேவை என்றால் கூட எங்கு கிடைக்கும் என இணையத்தில் முகவரியை தேடி பிறகு சென்று வாங்கும் அளவுக்கு இணையம் மிகவும் முக்கியமான ஒன்றாகிவிட்டது. இணையதளங்கள் மிகப்பெரிய விளம்பர மையமாக உள்ளது. வெளிநாடுகளில் ஒரு சிறு நிறுவனம் என்றால் கூட அதற்க்கான இணையதளம் உருவாக்கி அவர்கள் வியாபாரத்தை உலகம் முழுவதும் பரப்புகின்றனர். ஆனால் இந்த முறை இந்தியாவில் குறைவு. இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தும் எண்ணிக்கையிலும், சிறு தொழில் முனைவோர் பயன்பெறும் வகையிலும் கூகுள் நிறுவனம் ஒரு புதிய சலுகையை அளித்துள்ளது. இந்தியாவில் சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு இலவசமாக இணையதளங்கள் உருவாக்கி கொள்ளும் வசதியை கொடுத்துள்ளது.
இந்த சலுகையின் படி இலவச ஹாஸ்டிங், இலவச டொமைன் போன்ற வசதிகளை ஒருவருடத்திற்கு இலவசமாக பெறலாம். முக்கியமான விஷயம் இதன் மூலம் இணையதளங்கள் ஆரம்பிக்க நீங்கள் தொழில்நுட்ப அறிவு அதிகம் பெற்று இருக்க வேண்டிய அவசியமில்லை வெறும் 15 நிமிடத்தில் உங்களுக்கான இணையதளத்தை உருவாக்கி கொள்ளலாம்.

ஒருவருடத்திற்கு பிறகு இந்த சேவையை தொடர்ந்து பெற விரும்பினால் பணம் கட்டி தொடரலாம் இல்லை அப்படியே விட்டுவிடலாம் நமக்கு எந்த பண விரயமும் ஆகாது. இந்த வசதியின் மூலம் உருவாக்கப்படும் இலவச இணையதளங்களில் .in டொமைன் தான் கிடைக்கும்.


மற்றும் நீங்கள் தேர்வு செய்யும் டொமைன் பெயரில் ஈமெயில் முகவரிகளும் உருவாக்கி கொள்ளலாம் இதுவும் இலவசம் தான்.

இந்த லிங்கில் சென்று India Get Online இலவச இணையத்தை உருவாக்கி கொள்ளுங்கள். ஏதேனும் தொழில்நுட்ப சந்தேகம் வந்தால் 1800-266-3000 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம் இதற்கும் எந்தவிதமான கட்டணமும் உங்களிடம் இருந்து மாட்டார்கள். இது சம்பந்தமாக கூகுள் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை பாருங்கள்.


இந்த இலவச சேவை வசதியை பிரபல ஹாஸ்டிங் நிறுவனமான HostGator நிறுவனத்துடன் இணைந்து கூகுள் நிறுவனம் வழங்குகிறது.

மேலும் விவரங்கள் அறிய கூகுளின் இந்த google offers free websites to indian அறிவிப்பை பாருங்கள்

உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு இந்த செய்தியை பகிர்ந்து அவரின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிகாட்டுங்கள். 
சொந்த வீட்டை பற்றி பேசும்போது சொந்தமாக இணையத்தில் வீடு அமைப்பது குறித்த தகவலை பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

மேலாதிக்க தகவலுக்கு பார்க்க http://www.vandhemadharam.com/2011/11/blog-post_03.html
இது வந்தேமாதரம் வலைபூவின் மறுபதிப்பு.

Saturday, December 3, 2011

வீடும் -வீடு பேறும் - அண்னன் முருகேசன்.

அன்பு தாய்மார்களே, அருமை பெரியோர்களே, வாக்காள பெருமக்களே, நமது பெருமதிப்புக்குரிய அண்ணன் தானை தலைவர் சித்தூர் முருகேசன் அவர்கள் நமது வலை பூவுக்கு ஒரு பதிவை அளித்துள்ளார்கள் .. 

அவரின் தளத்தில் பிரசுரமாகியுள்ள இந்த பதிவை இங்கே மறு பிரசுரம் செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.  இந்த பதிவுலகிலேய என்னோட பதிவை காப்பி பண்ணிக்கலாம்னு சொல்லுறவங்க எனக்கு தெரிஞ்சு ரொண்டு பேர் தான்.

ஒருத்தர் நம்ம சித்தூர் முருகேசன்  http://www.anubavajothidam.com

இன்னொருத்தர் சிங்கை ராவணன். http://anjjamvakuppu.blogspot.com

நான் ரொம்ப நாளா வெறும் வாசகன் தான். கமேண்ட் மட்டும் போட்டுகிட்டு இருந்த என்னை நம்ம சித்தூர் முருகேசன் தான் என்னை எழுத சொன்னார் அவர் தளத்தில் என்னொட பதிவுகளும் இருக்குங்கிறது பெருமைக்குறிய விஷயம். ஓவர் டு முருகேசன். 
==========================================================================

வீடும் -வீடு பேறும்


அண்ணே வணக்கம்ணே !
இந்த எழுத்தும் ஒரு பேச்சுதேன். என்ன சைலன்ட் மோட்ல நடக்குது. இந்த பேச்சே மனிதன் காட்டில் வாழ்ந்தப்போ வேட்டைக்காக கூட்டத்தை பிரிஞ்சு மறுபடி கூடினப்போ ஆரம்பிச்சிருக்கும் போல. அப்பாறம் மன்சன் சஞ்சார வாழ்க்கைய விட்டு ஸ்திரவாசம் ஏற்படுத்திக்கிட்டப்போ ஊட்டுக்கு வந்து பொஞ்சாதி கிட்டே பீலா விடறதில ஆரம்பிச்சிருக்கும் போல.

அப்படி பீலா விடும்போது கொலிக்ஸ் ஆரும் உண்மைய போட்டு உடைக்காம இருக்கனும்னே மன்சன் வீட்டை கட்ட ஆரம்பிச்சானான்னும் நமக்கு ஒரு சம்சயம்.ஆனால் இந்த வீடு சமாசாரத்துக்கு பேசிக்கே கில்மா தான்னு அடிச்சு சொல்ல தோனுது.

காட்டு வாழ்க்கையில வேட்டையாடும் திறன் - சஞ்சார வாழ்க்கையில குதிரையேற்றம் இத்யாதி, ஸ்திரவாசத்துல தொழில் திறன் ,செல்வ செழிப்பை காட்டி குட்டிங்களை கரெக்ட் பண்ண மன்சங்கள்ள சிலரு ஆதிமன்சங்களாவே நின்னுட்டாய்ங்க போல.

அவன் பொஞ்சாதிய இவன் ,இவன் பொஞ்சாதிய அவன்னு கரெக்ட் பண்ண ஆரம்பிச்சிருக்கனும். அதுலயும் காட்டுவாழ்க்கையிலான லைஃப் ரிஸ்க் எல்லாம் ஸ்திரவாசத்துல இல்லியா ஆதி மன்சங்க ஸ்டேஜ்ல நின்னுட்ட பார்ட்டிங்க பயங்கர லந்து பண்ணியிருப்பாய்ங்க போல.

அவனவன் தன் பொஞ்சாதிய கட்டி காப்பாத்தவே வீடு மாதிரி எதையோ செய்ய ஆரம்பிச்சு அது இன்னைக்கு நில அபகரிப்புக்கு தனிப்பிரிவு போடற ரேஞ்சுக்கு பிக்காப் ஆயிருச்சுனு நினைக்கிறேன்.

மழை வெயில்ல இருந்து காப்பாத்திக்க வீடுதான் தேவைன்னு கிடையாதே. மொத்தத்துல வீடுங்கறதே கில்மாவை எந்த இன்டரப்ஷனும் -இன்செக்யூரிட்டியும் இல்லாம அனுபவிக்கத்தேன் உருவாகியிருக்கனும்.
அதுலயும் சொந்த வீடுங்கறது ஒவ்வொரு மன்சனுக்கும் ஒரு கனவாவே இருக்கு.

சொந்த வீடுங்கறது என்ன? இந்த சமூகத்துக்கு தனிமனிதன் போடும் லட்சுமண ரேகை. எம்.ஜி.ஆர் தொப்பி இல்லாம இருக்க முடிஞ்ச இடம் அவரோட வீடுதேன். கலைஞர் கருப்பு கண்ணாடி இல்லாம இருக முடிஞ்ச இடம் அவரோட வீடுதேன்.

மன்சன் விட்டு விடுதலையாகி ஆராமா இருக்க முடிஞ்ச இடம் வீடுதேன். வீடுங்கறது அவன் உள் மனப்படிமங்களின் ஸ்தூல வடிவம் - சரீரத்தின் நீட்சின்னு சொல்லலாம். அந்த மேட்டர்ல கன்டின்யுனிட்டி கெடுவதை மன்சன் லைக் பண்றதில்லை.அதனாலதேன் சொந்த வீடு கனவா போச்சு.

ஆரோ ஒரு மனோதத்துவ விஞ்ஞானி நம்ம கனவுகளுக்கெல்லாம் அடிப்படை கில்மான்னு சொல்லிவச்சிருக்காராம். இதை முழுக்க முழுக்க மறுக்க முடியுமா?

குகைகளில் வாழ்ந்த ஆதிமனிதனின் உள் மன தொன்ம படிமங்கள் அவனை வீடு கட்ட வைக்குது. மனிதனை வீடு பற்றி கன்வு காண வைக்குது போல.

டார்வின் ஒவ்வொரு உயிரோட குணாம்சமும் மன்சன்லயும் இருக்குங்கறதை தன் தன் பரிணாம தத்துவத்துக்கு ஆதாரமா சுட்டி விஸ்தாரமான உதாரணங்களை கொடுத்து ஸ்தாபிக்கிறார். வீடு பற்றி கனவு காணுவோர் கூடு கட்டி /குகை/வளையில் வசிக்கும் ஜீவராசிகளின் குணங்களை கொண்டவர்களாக இருக்கலாம்.

வீடு பற்றிய கனவுகளை கணக்கில் எடுக்காது காலத்தை தள்றவுக இன்னபிற ஜீவராசிகளின் குணங்களை கொண்டவர்களாக இருக்கலாம்.

இதையெல்லாம் படிச்சுட்டு "வக்ரம் புடிச்ச மன்சன்யா எல்லாத்துலயும் இதே இழவா"ன்னு திட்டிக்காதிங்க. உடலுறவை தெலுங்கு சமஸ்கிருத மொழிகளில் சம்யோகம்னு சொல்வாய்ங்க. யோகம் என்றால் கலத்தல்.
சம் என்பது சிறப்பு விகுதி.

உடலுறவில் ஆண் பெண் கலக்கிறார்கள்.அதன் மூலம் (அது ஆழமானதாக இருந்தால் இயற்கையோடும் கலக்கிறார்கள் - இயற்கையில் இருந்து தம்மை பிரிக்கும் மனதை - ஈகோவை கடக்கிறார்கள்.

யோகம்ங்கற வார்த்தைக்கும் கலத்தல்ங்கறது தான் பொருள்.யோகம் மனிதனை இறைவனோடு கலக்கிறது.
இறைவனோடு இவன் கலந்து தான் இருந்தான். பிறப்புக்கு முன் ஆகட்டும் -இறப்புக்கு பின் ஆகட்டும் இறைவனோடு கலந்துதான் இருந்திருப்பான்/இருக்கப்போகிறான்.

இறைவனோடு - இவன் கலந்திருந்த நினைவுகள் சப் கான்ஷியஸ்ல இருக்கலாம். இறைவன் தன்னை இயற்கையின் வடிவத்துல வெளிப்படுத்தியிருக்கான். பெண் இயற்கையின் பிரதி - நிதி -பிரதி நிதி. அவளை சேர்ந்தால் இயற்கையை -இயற்கையாக தன்னை வெளிப்படுத்திக்கிட்ட இறைவனை கலந்த நிறைவு மனிதனுக்கு ஏற்படுது.

மனம் கடந்த நிலையை வீடு பேறுன்னு சொல்லலாம். அந்த வீடு பேற்றின் ஃபோன்சாய்க் வடிவமே வீடுன்னு நான் சொன்னா மறுக்க முடியுமா? இறைவனின் சாங்கத்யத்துல மன்சன் எப்படி நிச்சிந்தையா இருக்கானோ அப்படி ஒரு ஃபீலிங்கை நாலு சுவர்கள் கொடுக்குது. மனிதனோட அசலான நோக்கம் அந்த நாலு சுவர் கிடையாது.

அவன் பிறப்புக்கு முன் தான் பெற்றிருந்த நிச்சிந்தையான நிலையை - மனமற்ற நிலையை - அகம் (ஈகோ) கடந்த நிலையை மீண்டும் பெற விரும்புறான். இயற்கையாக வெளிப்படுத்தி கொண்டிருக்கும் இறைவனுடன் இயற்கையின் பிரதி - நிதி -பிரதி நிதியான பெண்ணின் மூலம் இறைவனை கூட கனவு காண்றான்.

நான் பல தடவை சொல்வது போல மன்சனுக்கு எது அவெய்லபிளோ அதனோட அருமை பெருமை உறைக்கவே உறைக்காது. வீடு மேட்டர்ல கூட இதே நிலை தான். அது அன் அவெய்லபிளா இருந்தப்போ ஒடம்பெல்லாம் எண்ணெய் பூசிக்கிட்டு தெருவெல்லாம் புரள்றான். அது அவெய்லபிள் ஆனதும் அடுத்த ஸ்டாப்பிங்கை பற்றி ரோசிக்க ஆரம்பிச்சுர்ரன்.

ஆக்சுவலா இவன் கனவு காணும் வீடு இவன் சொந்த கனவில்லை.வாடகை கனவு . இவன் கனவு காணும் வீடு இவன் சொந்த வீடு அல்ல. இவன் வாழ்ந்த வீட்டின் நகல்.

(இப்டி ஊடு மேட்டர்ல சொல்ல மஸ்தா மேட்டருங்க இருக்குங்ணா இன்னொரு சந்தர்ப்பத்துல நோண்டி நுங்கெடுப்போம். அதுவரைக்கும் அம்பேல் வைத்து விடைபெறுவது ..ஹி ஹி சொல்லனுமா என்ன?)
 
அவரின் பதிவுக்கன லிங்க் http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_7253.html
 ======================================================================
உங்களின் மேலான கருத்தை வரவேற்கிறேன்.   நன்றி. 

Thursday, December 1, 2011

வீடு .. ஏன் ஏதற்கு ?

வீடு.. ஏன் , ஏதற்கு ?


வீட்டில இருக்கிறவங்களுக்கு தகுந்தபடி தான் வீடு அமையனும்/கட்டணும்/பார்கணும்... சரி

வீட்டில யார் இருக்கிறாஙக ?
அட என்னப்பா இது .. கேள்வி குடும்பத்தில் இருக்கும் எல்லாரும் வீட்டில் இருப்பாங்க...


மேலோட்டமா பார்த்தா சரிதான் .. ஆனா உண்மையில் சரிதானா?


ஒரு பொருளை யார் அதிகம் பயன் படுத்துகிறார்களோ... அவர்களுக்கு தகுந்தபடி தான் அது வடிவமைக்க படவேண்டு.  இது தான் புராடட் டிசைன் எனப்படும் வடிவமைப்பு மேலாண்மையின் அடிப்படை தத்துவம். 


அப்படி பார்த்தால் வீடு இதை அதிகம் பயன்படுத்துவது பெண்களும் குழ்ந்தைகளும் தான். 
அவர்களின் தேவைக்கு தக்கபடி வீடு வடிவமைக்கபட்டல் எல்லரும் அதில் பிர்ச்சனை இல்லாமல் இருக்கலாம்.

பொருளாதாரரீதியில் முடிவு எடுக்கும் உரிமை பாதிக்கும் அதிகமாக ஆண்களிடமே உள்ளது. பெருநகரங்களில்  ஆண்-பெண் பேதமில்லாமல் அதிகப்ட்ச பெண்களும் வேலைக்கு போய் /தொழில் செய்து சம்பாதித்தாலும் பெரும்பாலும் சொத்து ஆண்களின் பெயரிலேயே உள்ளது. சில சமயத்தில் பெண்கள் பெயரில் வாங்கினாலும் அது வருமான வரி கணக்கு காட்ட , எதிர்காலத்தில் இரண்டு பேர் வருமானத்தையும் கூட்டி காட்டி  லோன்வாங்கவும் தான்.  


கணவன் மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்தும் வீட்டின் போர்டில் ராம் இல்லம், ராஜ் இல்லம் என்று இருக்கும் வீடுகளை நிறைய காணலாம்.


இதிலென்ன தவறு இருக்கு ? கணவர் குடும்ப தலைவர். அப்படி தான் அரசாங்கமும் சொல்லி ரேசன் கார்டு எல்லாம் குடுத்து இருக்கு. வீட்டு போர்டில் பேர் எழுதுறத போய் பெரிசா சொல்ல வந்துட்டீங்களேன்னு நினைப்பீங்க..


தத்வமசி..நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். அப்படீன்னு உபநீஷத் சொல்லுது.. இருத்யத்தின் நிறைவை வாய் பேசும்.. அப்படின்னு ஒரு வசனம் பைபிளில் இருக்கு. பானையில் இருப்பது தான் அகப்பையில் வரும்னு பழமொழி இருக்கு. 


விஷ்யம் என்னன்னா .. உலகம் மொத்தமுமே. ஆண்களின் பார்வையில் வடிவமைக்கபட்டு இருக்கு இதில் பெண் தான் பெரும்பாலும் வேண்டபடாத ஆறாவது விரலாக உணர்கிறாள். பெண் தேவை எப்பன்னா ஆண்கள் மட்டுமே பயன்படுத்தும் பொருளாக இருந்தாலும் சரி அதை விளம்பரப்படுத்த ஒரு கவர்ச்சி பொம்மையாக தேவை. மெகா சீரியலில் கதறியழும் பாத்திரத்துக்கு தேவை. வீல்லியாகூட தேவை. ஆனா ஒரு சக உயிரியா தேவை இல்லை.


சுலபமா புரிய ... நமக்கு இப்போ  இன்னொரு முகவரியாய்ட்ட செல்போனை எடுத்துகோங்க..
செல்போன் வடிவமைப்பு, அதனுடன் வரும் ரோப். ஹெட் போன் எல்லாமே ஆண்கள்  பயன்படுத்த சுலபமாக இருக்கிறமாதிரி தான் வடிவமைக்க பட்டு இருக்கு. செல்போனை கொண்டு சொல்லும் ஆண், அதை சட்டை பாக்கெல்ட்டிவச்சுகலாம் .. இல்லை பேண்ட் பாக்கடில் வச்சுகலாம். அதே போனை கொண்டு செல்லும் பெண் அதை கையிலயேதான் வச்சுக்கணும் எங்க போனாலும். எதையும் எடுக்கணும்னா போனை வச்சுடு அதை எடுத்துட்டு திரும்ப அதை வச்சுட்டு போனை எடுக்கனும்.  சிலர் உடைகளுக்குள் வைத்தாலும் போன் கால் வந்தாலும் இல்லை போன்பண்ணனும்லும் பலர் முன்னிலையில் அங்கிருந்து எடுக்கவேண்டி இருக்கும். இதற்காகவே கையிலயே வச்சுகிறாங்க.


நானும் என் மனைவியும் வெளியில் எங்கும்போனா போனை அவளுடைய போனை என்னிடம் கொடுத்துட்டுறது  வழக்கம். நான் இப்படி செய்யாதே உன் போனை உங்கிட்ட வச்சுகோ.. ரெண்டும் எங்கிட்டை இருந்தா உன்னை நான் எப்படி கூப்பிறதுன்னு கேட்டா .. நான் போனை எங்க வச்சுக. கையில வச்சுக கஷ்டமா இருக்குன்னு சொல்லுறா.. அதான் ஹேன்பாக் கொண்டுவந்தாலன்றி.. ரெண்டு போனையும் நான் தான்வச்சு ..எனக்கு நானே கூப்பிடுக்கணும்.


இதை எதுக்கு சொல்றேன்னா செல்போன் எல்லாரும் பயன்படுத்தும் ஒரு பொருள். அதிலேயே நாம் கவனிச்சாலும், கவனிகாம விட்டாலும் இத்தனை விஷய்ங்கள் இருக்கு. 2 வருடம் வைத்திருக்கபோகும் செல்போனில் இவை எல்லாம் இருந்தால் வீடுன்னு வரும்போது எத்தனை இருக்கும்?


ஓஷொ சொல்வார் ஆண்கள் வீட்டு வருவது என்பது போவதற்கு வேறு எந்த இடமும் இல்லை, கிளப் , பார்,கடை எல்லாம் மூடியாகி விட்டது இனி வீட்டுக்குதான் போக முடியும் என்னும்போது தான். ஆனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியெ வருவது என்பது அதைதவிர  வேறு வழி இல்லை என்னும்போது தன். வீட்டை அதிகம் நேசிப்பது அதற்காக நேரம் செலவிடுவது பெண்கள் தன், வேலக்கு அல்லது  சொந்த தொழிலுக்கு போனாலும் இது தான் நிலை. 


ஆண்களில் சிலர் வீட்டு வேலைகளில், மிக ஆர்வமுடன் சிறு வயது முதலே ஈடுபடுவதை பார்க்கலாம். நாம் நினைப்போம், இப்படிபட்டவர்களின் மண வாழ்க்கை சிறப்பாக இருக்க்ம் என. ஆனால் உண்மை நேர்மாறாக இருக்கிறது . இப்படி பட்டவர்களுக்கு மணவாழ்க்கையில் பல பிரச்சனைகளையே பார்த்து இருக்கிறேன்.


இப்படி பேசும்போது இது ஆணதிக்கம் என்றால்.... 
ஆணதிக்கம் பெணதிக்கம் .. என்ன பெயர்  சொன்னலும் எது உள்ளதோ அது மெய்.  எனவே.. வீடு என்று வரும்போது பெண்கள், குழந்தைளின் வசதிக்கு தகுந்தபடி தான் வீடு அமையவேண்டும். பெண்கள் குழந்தகளின் வசதிக்கு வீடு அமைந்தால் அதில் ஆண்களும் நிம்மதியாக வசிக்க இயலும்.

சரி அப்ப பெண்கள் / குழந்தைகளின் தேவை என்ன. ?

Monday, November 28, 2011

வீடு - என்னென்ன யோசிக்கனும் என்ன தெரிஞ்சுக்கணும் ?

என்ன யோசிக்கனும் என்ன தெரிஞ்சுக்கணும் ?




கல்யாணம் பண்ணி பார். வீட்டை கட்டி பார்...
அப்படிங்கற பழ மொழி.. எல்லரும் அறிஞ்சது தான்.


வீடு கட்டுறதுக்கும் கல்யாணம் பண்றதக்கும் என்ன ஒற்றுமை...
அதேன்ன ரெண்டும் பார்ன்னு முடியுது...
அந்த காலத்துலயே டாஸ் மார்க் இருந்துருக்குமானு எல்லாம் கேட்க கூடாது..
இது கண்ணால பார்கிறோமே.. அதே பார் தான் .. 
ஏன் பார்ன்னு சொன்னாங்க..?

சாதரண வாழ்க்கையில் மார்கேடிங் சேல்ஸ் சர்விஸ் துறைகளை தவிர மற்றவற்றில் இருப்பவர்கள் புதிய நபர்களுடன் அதிகம் பழக வேண்டியது இல்லை. அதிலும் அலுவலக பணின்னா தினமும் பழகிய அதே நபர்களூடன் தான் பேச போகிறேன். அவர்களை பற்றி நமக்கு முன்பே தெரியும். எனவே இவர்கிட்ட இத கேட்கலாம் இவர் இப்படி தான்னு கணிச்சு இருப்போம்..

ஆன கல்யாணம்னு பொண்ணு .. இல்ல மாப்பிள்ளை பார்க்க போனா...
மக்க்ளின் சுயரூபம் எல்லம் அப்ப தான் தெரியும்...

நேற்று வரை என் உயிர் நீன்னு லவ் பண்ணிய லவ்வர் ...
எனக்கு வீட்டில பொண்ணு பார்க்கிறாங்க ... என் அண்ணி 50 பவுண், சன்ட்ரோ கார் கொண்டு வந்தாங்க .. நீயும் அப்படி வந்தா தான் கவுரமா இருக்கும்னு நேர சொல்லுவான் .. இல்ல சித்தப்ப பொண்ணு , மாம பொண்ண விட்டு சொல்ல சொல்லுவான் ...

அதோ போல் பொண்ணு அட்லீஸ்ட் ஒரு  சொந்த வீடு, வருஷம் 6  லட்சம் சம்பளம், மாமியார் கொழுந்தியா பிடுங்கல் இல்லாத இடம பார்கிறங்கடா நான் என்ன செய்யட்டும் நேரவே சொல்லிடுவா...



பெண் பார்க்க மாப்பிள்ளை பார்க்கன்னு போனா இருக்கிற அலம்பல் பற்றி ஒரு புத்தகமே போடலாம்.யாரால் எது எந்த நேரத்தில் எப்படி மாறும்ன்னு யாருக்கும் தெர்யாது   என் சொந்தகார பையனுக்கு பெண் பார்க்க போய் பையனுக்கும் பெண்ணுக்கு பெண் வீட்டில் பையன் வீட்டில் எல்லாம ஓகே.. ஆன திருமணம் நடக்கல ...ஏன் தெரியுமா ...  

பெண் வீடு கொஞ்சம் வசதிகுறைச்சலான இடம்.. அப்பா அம்மா ரெண்டுபேரும் தின கூலி வேலை.. அவங்களுக்கு ரெண்டு பெண்கள் தான். அதில் முதல் பெண்ணை தான் பையனுக்கு கேட்டது . பொண்ணுங்க ரெண்டுபேரும் படிச்சு முடிச்சு இப்ப வேலைக்கு  சேர்ந்திருக்காங்க.
பெண்ணுக்கு 5000 தங்கைக்கு 3000 சம்பளம். 


பெண்ணொட தங்கச்சி அக்காகிட்டயும் அப்பா அம்மாகிட்டையும் பேசி இப்போ கல்யாணம் வச்சா கொஞ்சமா தான் செலவு பண்ண முடியும் நகை போட முடியும். 5-6 வருசம் நாங்க சம்பாரிச்சு சேர்த்து வைச்சா 3-4 லட்சம் செலவில் கல்யாணம் பண்ணலாம் அதனால் இவளுக்கு இப்பொ கல்யாணம் வேண்டாம்னு சொல்லி, கல்யாணம் நின்னுபோச்சு..


கல்யாணம் பண்ண  வீடு கட்ட இதிலெல்லாம் இறங்கினா .. கீதோபதேசத்தை நேரில பார்க்கலாம்.

கடமையை செய் 
பலனை எதிர்பாரதே


பெண் /மாப்பிளை தேடலாம், பார்க்க போகலாம் , பேசலாம் பிடிச்சு போய்டலாம் .. 


ஏன் இன்னம் சில இடங்களில் மணவறை வரை வந்தும்  நின்றுபோன திருமணம் இருக்கு இல்ல..


அதுவும் வீடு கட்ட.. ஆரம்பிச்சா.. தினமும் மாலை 4 மணிக்கு மேஸ்திரி.. இல்லை இஞ்சினியர் போன் பண்ணி சார்.. ஒரு 10000, 8000 கொடுங்க, பேமெண்ட்ல அட்ஜஸ் பண்ணிக்கலாம்பார்..  இப்படி கொடுத்துட்டு .. அடுத்த நாள் 11 மணிக்கு சைட்டுக்கு போனா யாரும் இருக்க மாட்டங்க.. என்ன இன்னைக்கு யாரும் லீவ் கூட சொல்லல .. ஒரு வேலையும் நடக்கல.. காசு மாட்டும் தான்யா வாங்குறான்னு பொலம்பிகிட்டே காத்திருந்தா .. அரைமணி நேரம் கழிச்சு சித்தாள் மட்டும் வருவா .. கேட்டா சார்.. தண்ணி திர்ந்து போச்சு , நேத்தே மேஸ்திரிகிட்ட சொன்னோம் .. இன்னம் வரல.. தண்ணி வந்ததான சார் வேலை.. அதான் டீ சாப்பிட போய்டம்னு.. கூல்ல சொல்லுவா..


அடப்பாவி...மேஸ்திரி... பணம் வேண்ணுநு மாலை 4 - 6 வரை 12 தரம் போன்பண்ணி ..சன்டீவி உலக திரைபட வரலாறு விளம்பர  சாதனையை முறியடுச்சையே... ஒரு தரம் தண்ணி வண்டிக்கு போன்பண்ண கூடாதன்னு ஏக கடுப்பாகி போன்பண்ணி கேட்டால்.. சார் .. நேற்று மதியமே சைட்டுக்கு வந்து பார்த்து தண்ணி வண்டிக்கு போன்பண்ணிட்டேன் சார்.. வண்டி டிரைவர்ரோட மாமனர் வீட்டுல பாட்டி செத்துடாங்கனு போய்ட்டனாம்..  இன்னம் கொஞ்சம் நேரத்தில் வேற வண்டி வந்துரும் சார் .. நான் பார்த்துகறென். அப்புரம் .. சிமின்ட் கடை காரன் அட்வான்ச் கேட்டன் சார் .. மாலை வரட்டுமா ?ப்பார்..   என்ன சொல்றதுன்னே தெரியாம... பலி ஆடு மாதிரி முழிச்சுகிட்டெ வற்றதை தவிர வேறு வழியில்லை...


கொஞ்சம் கோவபட்டு பேசினா.. லவ்வர..பொண்டாடியை விட அதிகமா கோவிச்சுகிட்டு.. வாரகணக்கில் போனு பண்ண மாட்டர்.. வேலையும் நடக்காது .. அவருக்கு என்ன நட்டம்.. எல்லாம் நமக்கு தான் அதனால் பேசாமல் இருக்கிறது தான் சிறந்த வழின்னு, வீடு வேணுனு பட்ட ஆசையே துன்பத்துக்கு காரணம்னு... ஞானோபதேசம் எல்லாம் இலவசமா கிடைக்கும்.


 இடம் வீடு .. எல்லாம் எது எப்போ ..எப்படி அமையும்னு சொல்ல முடியாது.. 
இப்படி எதிர்பார்ப்பு இல்லாமல் , இடம் பொருள் ஏவல் பார்க்காமல் , ஈகோ பார்க்கமல் அலைஞ்சு .. கடன் பட்டு ஓஞ்சுபோய் ...வேலை முடியும்போது.. அதை பார்த்து ரசிக்கிறது ...கிட்டதட்ட.. பிரசவிச்ச பெண் .. குழந்தைய பார்க்கிரது மாதிரி...

அதனால் தான் கல்யாணம் பண்ணி பார் .. வீட்டை கட்டி பார்ன்னு நினைக்கறென்.


வீட்டு மேட்ட்ரில் முதலில் .. வீடு 

  1. ஏன், ஏதற்கு 
  2. எப்படி,
  3. எங்குன்னு
ஆராய்ச்சி பண்ணி முடிவு பண்ணிகிட்டா... அதிகம் அவதி படாம தப்பிக்கலாம்...


இதென்னடா வீடுனா குடியிருக்கதானே.. கேட்கல்லாம்... வீடு குடியிருக்க தான்..

ஆனா இந்த கேள்விக்கு விடை கண்டிபிடச்சா.. இன்னம் நல்லா இருக்கும்..


 ஏன், ஏதற்கு : 




வீடு .. குடியிருக்க தான் வாங்குறம்..சரி.. யார் குடியிருக்க? குடியிருக்கபோகும் நபர்களின் எண்ணிக்கை, தன்மை இதற்கு தகுந்தபடி வீடு இல்லைன்னா சொந்த வீடு வரமா இல்லாமல் சாபமா மாற வாய்ப்பு உண்டு. 

அலைபாயுதேவில் வரும் மாதவன் - ஷாலினி மாதிரி இருந்தா .. 1 ரூம் மட்டும் போது தான்..
 


கவனீங்க...பின்னனியில் இருக்கும் கட்டிமுடிக்கபடாத வீட்டை.. பேசபட முடியாத எழுதவும் சிரமான மன உணர்வுகளை ஒரு ஷாட்டில் காட்டுவதில் கலையுலக படைப்பாளிகள் திறமையானவர்கள் தான்.


 




ஆதி - பாடல்ல வர்ர மாதிரி குடும்பம் இருந்தா... மாதவன் ஷாலினி பேச கூட முடியாது...

இதனால் அறியப்படும் நீதி யாதேனில்.. 

வீட்டில் இருக்கும் நபர்களுக்கு தகுந்தபடி வீடு 
அமையாவிட்டல்.. வீடு அமைந்தாலும் இடைஞ்சலே..


ஆர்தரைடிஸ் மூட்டு வலி இருக்கிறவங்களுக்கும் 3வது  மாடியில் அருமையான வீடு
கிடைத்தாலும் முழுமனதுடன் கொண்டாட முடியுமா ?


இதையெல்லம் மனதில் வைத்து வீடு தேடினாலும் கிடைப்பது இறைவன் செயல் ..

Thursday, November 24, 2011

வீடு... சொந்த வீடு ஏப்படி...

வணக்கம் நண்பர்களே...


சொந்தவீடு கனவு ..சரி... 


ஆன கனவு மட்டும் கண்டா போதுமா?
நான் என்ன அப்துல் கலாமா? 
எல்லாரையும் கனவு காண சொல்லிட்டு அன்னிய அனுமின் சக்தி நிறுவனத்துக்கு கதவு திறந்து விட..?


மேலும் கனவு கனவே இருந்துட்டா? எதிர்காலம் என்ன சொல்லும்.
வரலாறு என்ன சொல்லும் ? 
( குடியிருக்கிற வீட்டுக்கு  ஓனர் என்ன சொல்லுவார்னு  சொன்ன அதுவும் சரிதான்..)


கனவு நினைவாக என்ன வழி.. 
  1. சொந்தமா காசு கொடுத்து வீடு வாங்கலாம் ... கட்டலாம்.
  2. சொந்த வீடு வாசல் வசதி இருக்கிற பொண்ணை டாவடிச்சு கரக்ட் பண்ணலாம்.. 
  3. யாரும் வாரிசில்லாத மாமா பெரியப்ப நம்க்கு உயில் எழுதி வச்சுட்டு டிக்கட் வாங்கிடலாம்... 
  4. எப்படியாவது அரசியல்ல சேர்ந்து மந்திரியாயட்ட.. தொழிலதிபர்கள் கிட்ட கடற்கரையோரம் பண்ணை வீட்டை இலவசமா வாங்கிகலாம்


... இப்படி பல வழி...


இதுல 1) ஐ தவிர மற்றவை அதிருஷ்ட்டத்தை சார்ந்தது ... 
இந்த அதிருஷ்டத்துக்கும்  நமக்கும் ரொம்ப தூரம்..
அதனால..


1) ம் வழிக்கன வழி முறைகளை சிந்திப்போம்... மத்த வழியில் எல்லாம் வீடு வாங்க /கட்ட அதிகம் யோசிக்க வேண்டியதில்ல.. ஆனா 1ம் வழியில் நாமே வீடு வாங்க கட்ட தான் நிறைய யோசிக்கணும். நிறைய தெரிஞ்சுக்கணும்...
என்ன யோசிக்கணும் .. என்ன தெரிஞ்சுக்கணும்...


யோசிப்போம்...

Monday, November 21, 2011

முதல் பக்கம் வருக வருக ..


சொந்த வீடு..

இது அனைத்து நடுத்தர மக்களின் கனவு.இதற்கு நானும் விதிவிலக்கல்ல.

நானும் எனது நண்பர்கள், உறவினர்கள்  சொந்த வீடு கட்ட / வாங்க முயலும்போது பட்ட , பார்த்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவே இந்த வலைபூ..

.இந்த மாதிரி.....



 இல்லையா...


ம்ம்..இந்த மாதிரி.....


 இதுவும் இல்லயா...

குறைந்தது ..


 இந்த மாதிரியாவது ஒரு சொந்த வீட்டை அடைய...முயற்சிப்போம்..

உங்களின் அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள். நாம் எல்லாரும் பயனடைய வாய்ப்பாக இருக்கும்.

நன்றி.
ரவி/வினோத்.

பிகு..
படங்கள்..
நன்றி.. கூகுள்...